பஞ்சாபின் பெரோஸ்பூரில் பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி அதிலிருந்த போதைப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் எல்லைப் பகுதிகளுக்கு டிரோன்கள் மூலம் போதைப்பொருட்கள், ஆயுதங்கள், வெடிபொருட்களைக் கொண்டு போட்டுவிட்டுச் செல்லும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.
இதனால் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாபின் பெரோஸ்பூரில் இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோனைச் சுட்டு வீழ்த்தினர். அதில் 5 பார்சல்களில் இருந்த போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.