பாரியளவிலான பேரண்டபொருளாதார உறுதிப்பாட்டுக்கு ஆதரவளிப்பதற்கான கொள்கைசார்ந்த திட்டம் : செலாவணி வீதத்தில் நெகிழ்ச்சித்தன்மையை அனுமதித்தல்

வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பக்கத்தில் அண்மைக்கால அபிவிருத்திகளினையும் பரிசீலனையிற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்றினை 2022 மார்ச்சு 04 இல் அறிவித்திருந்தது.

தோற்றம்பெற்றுவரும் பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளை உலகளாவிய மற்றும் உள்நாட்டு ரீதியில் உன்னிப்பாக கண்காணிக்கும் என்பதுடன் பணவீக்கம், வெளிநாட்டுத் துறை மற்றும் நிதியியல் துறை மற்றும் உண்மைப் பொருளாதார நடவடிக்கையில் உறுதிப்பாட்டினை அடையும் இலக்குடன் பொருத்தமானவாறு மேலதிக வழிமுறைகளை மேற்கொள்வதற்குத் தயாராக இருக்குமெனவும் இலங்கை மத்திய வங்கியானது குறிப்பிட்டிருந்தது.

இந்த வகையில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் செலாவணி வீதத்தில் மேலும் நெகிழ்ச்சித்தன்மை சந்தைகளுக்கு அனுமதிக்கப்படும். வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள் ஐ.அ.டொலரொன்றிற்கு ரூ.230 இனை விஞ்சாத மட்டங்களில் இடம்பெறுமென இலங்கை மத்திய வங்கி கருதுகின்றது.

இலங்கை மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டு சந்தையிலான அசைவுகளை தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன் அதற்கேற்ப பொருத்தமான கொள்கைத் திருத்தங்களை மேற்கொள்ளும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.