புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஷேன் வார்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தின் கோ சமுய் தீவிற்கு சுற்றுலா சென்ற ஷேன் வார்ன் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் பிரேத பிரிசோதனைக்காக சூரட் தனி நகருக்கு படகு மூலம் கொண்டு செல்லப்பட்டது.
நெடுங்காலம், அவரின் மேலாளராகப் பணியாற்றிய ஜேம்ஸ், அதிகம் புகைப்பிடித்ததால் ஷேன் வார்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
மேலும், ஆஸ்திரேலியாவில் இருந்த போதே ஷேன் வார்னுக்கு நெஞ்சு வலி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.