நெல்லிக்குப்பம் : கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் மீது எந்த வழக்கும் இல்லை என போலீசில் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, அவர்கள் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பல ஆயிரம் கோவில்கள் உள்ளன. இங்கு அலுவலர்கள், பணியாளர்கள், குருக்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் என ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் கடிதம் வந்துள்ளது.
அதில், கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமின்றி குருக்கள், பட்டாச்சாரியார்கள் மீது எந்த வழக்கும் இல்லை என தங்கள் ஊர் போலீஸ் நிலையங்களில் சான்றிதழ் பெற்று அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, கோவில் பணியாளர்கள் மற்றும் குருக்கள் உட்பட அனைவரும் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு படையெடுத்து சான்றிதழ் பெறும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நெல்லிக்குப்பம் : கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் மீது எந்த வழக்கும் இல்லை என போலீசில் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.