Tamilnadu MRB recruitment Siddha, Ayurveda, Homeopathy, Unani Pharmacist jobs: தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் யுனானி மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் யுனானி ஆகிய மருத்துவங்களின் மருந்தாளுனர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 17.03.2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 84
மருந்தாளுனர் – சித்தா (Pharmacist – Siddha)
காலியிடங்களின் எண்ணிக்கை : 73
கல்வித் தகுதி : Diploma in Indian System of Medicine (or) Diploma in Pharmacy in Siddha (or) Diploma in Integrated Pharmacy
சம்பளம் : ரூ. 35400-112400
மருந்தாளுனர் – ஆயுர்வேதம் (Pharmacist – Ayurveda)
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : Diploma in Indian System of Medicine (or) Diploma in Pharmacy in Ayurveda (or) Diploma in Integrated Pharmacy
சம்பளம் : ரூ. 35400-112400
மருந்தாளுனர் – ஹோமியோபதி (Pharmacist – Homoeopathy)
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : Diploma in Indian System of Medicine (or) Diploma in Pharmacy in Homoeopathy (or) Diploma in Integrated Pharmacy
சம்பளம் : ரூ. 35400-112400
மருந்தாளுனர் – யுனானி (Pharmacist – Unani)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : Diploma in Indian System of Medicine (or) Diploma in Pharmacy in Unani (or) Diploma in Integrated Pharmacy
சம்பளம் : ரூ. 35400-112400
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
இதையும் படியுங்கள்: ரூ.70000 சம்பளத்தில் வங்கி வேலை; 100 பணியிடங்கள்; டிகிரி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும், டிப்ளமோ படிப்பு மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://mrbonline.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.03.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட இணையதளப் பக்கங்களைப் பார்வையிடவும்.
சித்தா : https://www.mrb.tn.gov.in/pdf/2022/Siddha_Notification_250222.pdf
ஆயுர்வேதா : https://www.mrb.tn.gov.in/pdf/2022/Ayurveda_Notification_250222.pdf
ஹோமியோபதி : https://www.mrb.tn.gov.in/pdf/2022/Homoeopathy_Notification_250222.pdf
யுனானி : https://www.mrb.tn.gov.in/pdf/2022/Unani_Notification_250222.pdf