மார்ச் 26ந்தேதி ஐபிஎல் போட்டிகள் தொடக்கம்: சிஎஸ்கே மோதும் அணிகள் மற்றும் தேதிகள் விவரம்…

சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஐபிஎல்2022 போட்டிகள் வரும் 26ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த தேதிகளில்  எந்த அணியுடன் மோதுகிறது என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம்பெற்றுள்ளதால் போட்டிகளும் அதிகரித்துள்ளது. அதன்படி,  இத்தொடரில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், லீக் ஆட்டங்களுக்கான அட்டவணையை  பிசிசிஐ  வெளியிட்டுள்ளது.

ஐபிஎல்2022ன் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில்  இரவு 7.30 மணிக்க தொடங்குகிறது. முதல் போட்டியானது ஐபிஎல் 2022 வின்னர் சிஸ்கே அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்கள் அணிக்கும் இடையே நடைபெறுகிறது.

மார்ச் 31ந்தேதி நடைபெறும் 2வது ஆட்டத்தில் சிஎஸ்கே லக்னோ அணியை எதிர்கொள்கிறது.

ஏப்ரல் 3ம் தேதி 3வது ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடனும், ஏப்ரல் 9ம் தேதி 4வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடனும் விளையாடுகிறது. ஏப்ரல் 12ஆம் தேதி சென்னை அணி தனது 5வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. ஏப்ரல் 17ஆம் தேதி குஜராத்துடனும், ஏப்ரல் 21ல் மும்பையுடனும், ஏப்ரல் 25ஆம் தேதி பஞ்சாப் அணியுடனும், மே 1ஆம் தேதி ஐதராபாத் அணியுடனும் மோதுகிறது.

மே 4ஆம் தேதி பெங்களூரு அணியுடனும், மே 8ம் தேதி டெல்லி அணியுடனும், மே 12ம் தேதி மும்பையுடனும், மே 15ம் தேதி குஜராத் அணியுடனும் சென்னை அணி மோதுகிறது. மே 20ம் தேதி சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் தொடரின் போட்டிக்கான முழு அட்டவணை

CricTracker IPL 2022 Schedule

முன்னதாக உறுதிசெய்யப்பட்டபடி, ஐபிஎல் 2022 இன் அனைத்து லீக் போட்டிகளும் நான்கு மைதானங்களில் நடைபெறும். அதன்படி மும்பை மற்றும் புனேவில் ஒன்று. வான்கடே மற்றும் டிஒய் பாட்டீல் மைதானத்தில் தலா 20 போட்டிகளும், மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானம் மற்றும் புனேவில் உள்ள எம்சிஏ மைதானம் தலா 15 ஆட்டங்கள் வரை விளையாடும்.

ஐபிஎல் தொடரின் அனைத்து லீக் போட்டிகளுக்கும் 25% பார்வையாளர்களை அனுமதிக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. பிளேஆஃப் போட்டிக்கான இடம் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஐபிஎல் 2022 பிளேஆஃப்களுக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.