30 வருடத்திர்கு முன்பு சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்து தாராளமயமாக்கல் அமலாக்கம் செய்தபோது உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு உருவாகியது. இதனால் கோகோ கோலா, மெக் டொனால்டு முதல் விசா, மாஸ்டர்கார்டு முதல் அனைத்து துறையின் முன்னணி நிறுவனங்களும் ரஷ்யா மற்றும் இதர சோவியத் யூனியன் நாடுகளுக்குப் படையெடுத்தது.
தற்போது விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்யா, உக்ரைன் மீது தொடுத்துள்ள போர் மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் வர்த்தகத்தை நிறுத்தியும், தடை செய்தும், அந்நாட்டில் இருந்து மொத்தமாக வெளியேறத் துவங்கியுள்ளது.
அந்த மனசு தான் சார் கடவுள்.. உக்ரைன் மக்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் நெட்டிசன்ஸ்..!
எண்ணெய் மற்றும் எரிவாயு
பிரிட்டன் BP, ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை மொத்தமாக விற்பனை செய்து விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.
பிரிட்டன் BP நிறுவனத்தைத் தொடர்ந்து ஷெல் எக்சான் மொபில், ஈக்வினார் ஆகிய நிறுவனங்கள் ரஷ்ய முதலீட்டை திரும்பப் பெற துவங்கியுள்ளது
மேலும் டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனம் இனி ரஷ்யாவில் புதிய முதலீடுகளைச் செய்யாது என அறிவித்துள்ளது.
பொழுதுபோக்கு
வார்னர் ப்ரோஸ், டிஸ்னி, சோனி ஆகிய அனைத்து முன்னணி நிறுவனங்களும் தனது புதிய திரைப்படங்களை வெளியிடாது என அறிவித்துள்ளது. இதேபோல் இந்நிறுவனங்களின் டிஜிட்டல் சேவைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது
ரஷ்யாவில் சமீபத்தில் வர்த்தகத்தைத் துவங்கிய நெட்பிளிக்ஸ் உக்ரைன் மீதான போர் காரணமாக மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளது.
டெக்னாலஜி
சாம்சங் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் ரஷ்யாவில் இனி புதிய போன்களை விற்பனை செய்யாது என்றும், ஏற்றுமதி செய்யாது என அறிவித்துள்ளது.
ஆப்பிள் தனது ஆப்பிள் பே மற்றும் ஆப்பிள் மேப்ஸ் சேவைகளுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஆப்பிள் ரஷ்யாவில் இருக்கும் கடைகளை மூடவும் முடிவு செய்துள்ளது.
கூகுள் மற்றும் பேஸ்புக் பல வருமானம் ஈட்டும் சேவைகளுக்கு மொத்தமாகத் தடை விதித்துள்ளது.
ரீடைல்
ஜாரா, பெர்ஷ்கா, ஸ்ட்ராடிவாரிஸ் மற்றும் ஓய்ஷோ போன் 8 முக்கியப் பிராண்டுகளை வைத்திருக்கும் இண்டிடெக்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் இருக்கும் 502 கடைகளையும் மூடுவதாக அறிவித்துள்ளது
ஸ்வீடன் நாட்டின் ஐகியா நிறுவனம் 17 கடைகளை மூடிவிட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளது
H&M, நைக், பர்பெர்ரி மற்றும் சேனல் ஆகிய பல ரீடைல் நிறுவனங்கள் விற்பனையை மொத்தமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஆட்டோமொபைல்
ஆடம்பர் மற்றும் முன்னணி கார் நிறுவனங்களான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR), ஜெனரல் மோட்டார்ஸ், ஆஸ்டன் மார்ட்டின் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ஆகியவை ரஷ்யாவில் இனி விற்பனை மற்றும் ஏற்றுமதியை மொத்தமாக நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதேபோல் கட்டுமான வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான JCB அனைத்து சேவைகளையும் முடங்கியுள்ளது.
வோக்ஸ்வாகன் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகியவை ரஷ்யா, உக்ரைன் நாட்டில் உற்பத்தி பணிகளை நிறுத்தியுள்ளது.
கப்பல் போக்குவரத்து
உலகின் இரண்டு பெரிய சரக்குக் கப்பல் நிறுவனங்களான MSC மற்றும் Maersk ஆகியவை உணவு, மருத்துவம் மற்றும் மனிதாபிமான முறையில் வெளிநாட்டில் இருந்து வரும் பொருட்களுக்கு மட்டுமே ரஷ்யாவிற்குச் சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை அளிக்கப்படும், மற்றவைக்குக் கட்டாயம் அளிக்கப்படமாட்டாது என அறிவித்துள்ளது.
நிதியியல்
சர்வதேச சந்தையில் மிகப்பெரிய பேமெண்ட் சேவை நிறுவனங்களாக விளங்கும் விசா, மாஸ்டர்கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் பேபால் ஆகிய நிறுவனங்களின் சேவைக்கு ரஷ்யாவில் மொத்தமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாகப் பேபால் ரஷ்யாவில் இருந்து அனைத்து வித்டிரா சேவைக்கும் அனுமதி அளித்துவிட்டு டெபாசிட் அல்லது ரஷ்யாவுக்கும் வரும் பேமெண்ட்-ஐ நிறுத்தி வைத்துள்ளது.
அப்போ யார் தான் இருக்கிறார்கள்..
மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவு அளிக்கும் அல்லது மேற்கத்திய நாடுகளைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் அனைத்து நிறுவனங்களுக்கு வெளியேறியுள்ளது.
இதேபோல் ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது.
சீனா
ஆரம்பம் முதல் ரஷ்யாவுக்கு ஆதரவு அளித்து வரும் சீனாவுக்கு ரஷ்யா-வை புதிய வர்த்தகப் பகுதியாகப் பார்க்கப்படுகிறது. சீனா மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக அனைத்து துறையிலும் சிறந்து விளங்கும் காரணத்தால், ரஷ்யாவை விட்டு வெளியேறிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இணையான சேவையைக் கட்டாயம் சீனாவால் கொடுக்க முடியும்.
Russia Ukraine Crisis: list of companies exiting Russia – Complete details
Russia Ukraine Crisis: list of companies exiting Russia – Complete details ரஷ்யாவை கைகழுவும் பன்னாட்டு நிறுவனங்கள்.. சீனாவுக்கு எதிர்பார்க்காத ஜாக்பாட் – முழு விபரம்