அயர்லாந்தில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் வாயில்களை டிரக் ஒன்று இடித்து உடைத்தெரிந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. டிரக் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்தனர்.
டெஸ்மண்ட் விஸ்லி எக்லெசியாஸ்டிகல் சப்ளைஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பெரிய சப்ளை டிரக் தெற்கு டப்லினில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் வாயில் அருகே ரிவர்ஸ் வந்து கொண்டிருந்த நிலையில், வேகமாக சென்று தூதரகத்தின் இரும்பு கதவுகளை இடித்து தள்ளியது.
ரஷ்ய தூதரகத்தின் வாயில் மீது டிரக் மோதியதை மக்கள் பிளக்ஸ் கார்டுகளுடன் வாயில்களுக்கு அருகில் நின்று படம்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவிவருகிறது.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மதியம் 1.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து டிரக் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு Rathfarnham Garda நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக Gardaí தெரிவித்துள்ளது.
கிரிமினல் சேத சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் படை தெரிவித்துள்ளது.
சம்பவ இடம் சுற்றி வளைக்கப்பட்டது மற்றும் தூதரகத்திற்கு அருகிலுள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன.
தெற்கு டப்ளினில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.