தூத்துக்குடி: தூத்துக்குடியில் சர்வதேச தரத்திலான பரினிச்சர் பூங்கா தொடங்குவதற்கான அடிக்கல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாட்டப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து, ரூ.4,755 கோடியில் 6 நிறுவனங்களுடன் தமிழக தொழிற்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. இதன் மூலம், 3 ஆயிரத்து 653 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழகஅரசு தெரிவித்துள்ளது.
தென்மாவட்ட வளர்ச்சியை கருத்தில்கொண்டு, துறைமுகம் நகரமான தூத்துக்குடி சிப்காட்டில், நாட்டிலேயே முதல் முறையாக சர்வதேச அறைகலன் (பர்னிச்சர்) பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 1,156 ஏக்கர் நில ஒதுக்கப்பட்டு 13 கிலோ மீட்டர் தொலைவில் சர்வதேச பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படுகிறது. சூரிய மின்சக்தி உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு சேகரிப்பு மற்றும் தங்களுக்கான சுத்திகரிப்பு வசதி உள்பட பல்வேறு வசதிகளிடன் தொடங்கப்பட உள்ள இநத் பர்னிச்சர் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.4,755 கோடியில் 6 நிறுவனங்களுடன் தமிழக தொழிற்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
விழாவில் ஹைடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் டெக்னிக் பிரான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு ஆணைகளை யும் முதல்-அமைச்சர் வழங்கினார்.
முதல்கட்டமாக ரூ. 1,500 முதல் 1,800 கோடி அளவிற்கான முதலீடுகள் மற்றும் ஒரு லட்சத்து பத்தாயிரம் முதல் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக வாய்ப்பு உள்ளது.
2வது கட்டமாக, 8 முதல் 10 ஆண்டுகளில் முழுமையாக செயல்படும் போது ரூ. 3,500 முதல் 4,500 கோடி அளவிற்கான முதலீடுகள் மற்றும் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.