மம்தா பானர்ஜி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து கொல்கத்தா திரும்பியபோது, கடந்த சனிக்கிழமைக்கு பின்னர் மீண்டும் இன்று இரண்டாவதாக முறையாக விமான விபத்திலிருந்து தப்பியதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவைக்கு வெளியே பேசிய அவர், “திடீரென்று என் விமானத்தின் முன்னால் இன்னொரு விமானம் வந்தது… விமானியின் திறமையால்தான் நான் உயிர் பிழைத்தேன், திடீரென விமானம் 6,000 அடி கீழே இறங்கியது . எனக்கு முதுகு மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டது. எனக்கு இன்னும் வலி இருக்கிறது” என தெரிவித்தார்
முன்னதாக, மேற்குவங்க சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் ஆளுநரை சந்தித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், ஆளுநரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM