விமான பயணத்தில் நேர்ந்த அந்த சம்பவம்… முதல்வர் அதிர்ச்சி தகவல்!

ஏழாவது மற்றும் இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு,
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி
நேற்று முன்தினம் (மார்ச் 5), உத்தரப் பிரதேசத்தில் இருந்து விமானத்தில் கொல்கத்தா திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது அவர் பயணம் செய்த விமானம் திடீரென குலுங்கியது. இதில் மமதாவுக்கு உள்காயம் ஏற்பட்டது.

இருப்பினும் விமானி சாதுர்யமாக விமானத்தை செலுத்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை கேட்டு, மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு, மேற்கு வங்காள அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

இ்ந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முதல்வர்
மமதா பானர்ஜி
கூறும்போது, “நான் பயணித்த விமானத்தின் எதிரே திடீரென மற்றொரு விமானம் வந்தது. அடுத்த சில வினாடிகள் அதே நிலை நீடித்திருந்தால் இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கும்.

ஆனால் விமானியின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்தேன். விமானம் 6000 அடி கீழே இறங்கியது. இதனால் எனக்கு காயம் ஏற்பட்டது. இன்னும் வலி உள்ளது” என்று அவர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.