உத்தரப்பிரதேச தேர்தல்:
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் இருக்கின்றன. இந்த மாநிலத்துக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதிக சட்டமன்றத் தொகுதி மட்டுமின்றி அதிக மக்களவை தொகுதிகளைக் கொண்ட மாநிலம் என்பதினால் இந்த மாநில தேர்தல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி 312 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 47 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 17 இடங்களிலும், அப்னா தளம் (சோனேலால்) 9 இடங்களிலும், இந்தியத் தேசிய காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.
இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக 376 இடங்களிலும், நிசாத் கட்சி 15 இடங்களிலும், அப்னா தளம் (சோனேலால்) 12 இடங்களிலும் தேர்தலைச் சந்திக்கிறது. இந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்யாநாத் அறிவிக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி 403 இடங்களிலும் தனித்துத் தேர்தலைச் சந்திக்கிறது. சமாஜ்வாதி கட்சி கூட்டணியில், சமாஜ்வாதி உட்பட மொத்தம் எட்டு கட்சிகள் ஒன்றிணைத்து இந்த தேர்தலைச் சந்திக்கிறது. இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சி தனித்து களம் காண்கிறது. இடதுசாரிகள் தொடங்கி, ஆம் ஆத்மி கட்சி வரை பலரும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
கருத்துக்கணிப்பு முடிவுகள்:
இன்று உத்தரப்பிரதேசத்தின் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்த முடிவுகள் பின்வருமாறு:
ரிபப்லிக் செய்தி நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
உத்தரப் பிரதேசம் மொத்த இடங்கள் – 403
பாஜக கூட்டணி – 262 முதல் 277
சமாஜ்வாடி கூட்டணி – 119 முதல்134
பகுஜன் சமாஜ் – 7 முதல் 15
காங்கிரஸ் – 3 முதல் 8
மற்றவர்கள் – 1 முதல் 3
பாஜக கூட்டணி – 262 முதல் 277
சமாஜ்வாடி கூட்டணி – 119 முதல்134
பகுஜன் சமாஜ் – 7 முதல் 15
காங்கிரஸ் – 3 முதல் 8
மற்றவர்கள் – 1 முதல் 3