‘துபாய் எக்ஸ்போ’நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் ரசிகர்களை உற்சாகப்படுத்த இசைக் கச்சேரியுட் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் அனிருத், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசைக் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கடந்த 5ஆம் தேதி இளையராஜாவின் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. இதில் இளையராஜாவும் கலந்துகொண்டு பல்வேறு பாடல்களை பாடி ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார். நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு துபாயில் உள்ள ஏ.ஆர்.ரகுமானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு
இளையராஜா
திடீரென்று சென்றுள்ளார்.
அப்போது இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
ஏஆர் ரஹ்மான்
. மேலும் அந்த பதிவில், “மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்காலத்தில் எங்கள் ஸ்டூடியோவில் அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்” என பதிவிட்டிருந்தார்.
ஏஆர் ரஹ்மானும் இளையராஜாவும் ஒன்றாக இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் ஏஆர் ரஹ்மானின் டிவிட்டுக்கு பதில் அளித்து ரசிகர்கள் திக்கு முக்காட வைத்துள்ளார் இளையராஜா. அதாவது வேண்டுகோள் ஏற்கப்பட்டது, விரைவில் கம்போஸிங் பணிகளை தொடங்குகிறேன் என பதிவிட்டு ஏஆர் ரஹ்மானின் டிவிட்டர் ஹேண்டிலையும் குறிப்பிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.