உக்ரைனில் பள்ளிகள், மருத்துவமனைகள் மீது தாக்குதல்
உக்ரைனில் பள்ளிகள் மருத்துவனைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 15 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
16,000 இந்தியர்கள் மீட்பு
உக்ரைனில் இருந்து இதுவரை 16,000 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் கங்கா என பெயரிடப்பட்டு மீட்புப் பணிகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
இதுவரை 16,000 இந்தியர்களை 76 விமானங்களில் அழைந்து வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
12-ஆவது நாளாக நீடிக்கும் போர்
உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ஆம் தேதி ரஷ்யா போரை தொடங்கியது. 12-ஆவது நாளாக போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஏற்கனவே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
விமான நிலையில் தகர்ப்பு
ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரில் ரஷ்ய படைகள் 8 முறை ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் அந்த நகரில் இருந்த விமான நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதனை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
9 லட்சம் அகதிகள்: போலந்து
உக்ரைனில் இருந்து இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக போலந்து அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் போராட்டம்
உக்ரைனில் போர் நடத்த உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிரான அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்ட 1,700 க்கும் அதிகமானோரை ரஷ்ய போலீஸார் கைது செய்துள்ளனர்.
மீட்புப் பணியில் இந்தியக் குழு
உக்ரைனின் சுமியில் இருந்து மேற்கு எல்லைகளுக்கு இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக செல்வதை ஒருங்கிணைக்க இந்திய தூதரகக் குழு பொல்டாவா சென்றது. சுமியில் உள்ள மாணவர்கள் விரைவில் வெளியேற தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை
உக்ரைனின் தலைநகர் கீவில் உள்ள இந்தியத் தூதரகம் அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், தங்கள் பெயர்கள் மற்றும் விவரங்களை கூகுள் படிவத்தில் உடனடியாக உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் வேண்டுகோளுக்கு இணங்க உக்ரைனின் 4 நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தி வைத்துள்ளது ரஷ்யா. கார்கிவ், கீவ், மரியபோல், சுமி ஆகிய நகரங்களில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தற்காலிக போர் நிறுத்தம்
எத்தனை சோதனை வந்தாலும் உறுதியோடு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கழகத்தைக் காப்போம்; கவலை வேண்டாம் என்று சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தொழில் வளர்ச்சியை உயர்த்தி மக்களுக்கு சிறப்பான வாழ்வை அளிப்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்தியாவின் முதல் சர்வதேச அறைகலன் பூங்கா தென்கோடி மாவட்டமான தூத்துக்குடியில் அமையவுள்ளது என்பது பெருமை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். வ.உ.சியின் பொருளாதார கனவு நிறைவேறும் நாளாக அறைகலன் பூங்கா அமையும் நாள் இருக்கும் என்றார் முதல்வர்.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகவுள்ள 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் நேரடியாக 17,476 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் போதுமானதாக இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை அடுத்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ஆபரண தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ரூ.40,000 ஐ தாண்டியது.
உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் சீனா வலியுறுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வலியுறுத்தினார்.
உக்ரைனின் மைகோலைவ் நகரில் ரஷ்ய படைகள் சக்திவாய்ந்த குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இந்த காணொளியை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
Russian forces appear to have launched a heavy artillery barrage against Mykolaiv, a day after Ukrainian troops pushed them from the city and recaptured the airport. From my vantage, I could see flashes from the attack lighting up the night sky along a large swath of the city. pic.twitter.com/cm4E0cNtN3
— Michael Schwirtz (@mschwirtz) March 7, 2022
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்காக ரஷ்யாவை ஐரோப்பா நம்பியுள்ளது. எனினும், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய தடை விதிக்க அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஆலோசனை நடத்தி வருகிறது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இலங்கையில் எரிபொருள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், உக்ரைன்-ரஷ்யா போரின் தாக்கம் மேலும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் இருந்து இதுவரை 1038 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர அரசு உதவி செய்ய வேண்டும் என்று தாயகம் திரும்பிய மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.