உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போரைத் தொடுத்தது. இதில் உக்ரைனின் பல இடங்கள் ராக்கெட் குண்டுகளுக்கு இரையாக்கப்பட்டன. பல லட்சக் கணக்கிலான பூர்வகுடிகள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
இந்த சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதிய சட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அதில் ஒன்று தான் ‘போலி செய்தி சட்டம்’. இந்த ‘
Fake News Law
‘ சட்டத்தைக் கொண்டு ரஷ்ய நாட்டிற்கு எதிராக கருத்து தெரிவிக்கப்படும் தளங்கள் அனைத்தும் முடக்கப்படும்.
Russia Ukraine News: உக்ரைன் பெண்களை Tinder-இல் டேட்டிங்கிற்கு அழைக்கும் ரஷ்ய ராணுவத்தினர்!
ரஷ்ய Fake News சட்டம்
அதுமட்டுமில்லாமல், பதிவிட்டவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கருத்துச் சுதந்திரத்தை வேரோடு பிடுங்கும் செயல் என டெக் நிறுவனங்கள் கடுமையாக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
அதாவது, ‘உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது’ என்று பதிவிட்டால் கூட, அது இந்த சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும். மேலும், ரஷ்ய நாட்டின் ராணுவம் தொடர்பாக ஏதாவது பதிவிட்டாலோ, அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என ரஷ்யச் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
டிக்டாக் தடை
இதனைத் தொடர்ந்து, பிரபல வீடியோ பகிர்வு தளமான டிக்டாக் தனது செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளது. தங்கள் தளத்தில் ரஷ்ய சர்வர்களில் இருந்து வீடியோக்களை அப்லோடு செய்யத் தடை விதித்துள்ளது. ரஷ்யாவின் புதிய சட்டங்கள், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக இருப்பதாகவும், இந்த சட்டங்களுக்கு உட்பட்டு கண்டெண்டுகளை பதிவிட முடியாது எனவும் நிறுவனம் தங்கள் பக்க நியாயத்தை விளக்கியுள்ளது.
வெளியேறும் டெக் நிறுவனங்கள்
டெக் நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்த வேண்டும் என உக்ரைன் கோரிக்கை வைத்திருந்தது. இதற்கு சிலிக்கான் வேலியின் பல பெரும் டெக் நிறுவனங்கள் செவி சாய்த்துள்ளது.
ரஷ்யா மீது நடவடிக்கை எடுங்கள் – டெக் ஜாம்பவான்களிடம் கோரிக்கை வைத்த உக்ரைன்!
முதலில், ரஷ்ய நிறுவனங்களின் சமூக வலைத்தள பக்கங்களை பேஸ்புக் முடக்கியது. இதனால் கடுப்பான ரஷ்ய விளாடிமிர் புடின் அரசு பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்கள் ரஷ்யாவில் செயல்படத் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக எந்த நிறுவனங்களும் ரஷ்ய அரசிடம் மன்றாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல், பிரபல BBC செய்தி நிறுவனத்துக்கும் ரஷ்யா தடை விதித்தது. உக்ரைன் பக்கம் நியாயம் இருப்பதாகக் கூறி செய்தி வெளியிட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ரஷ்யாவுக்கு இனி இன்டநெட் கிடையாது
பல நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்தி வரும் வேளையில், அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனமான ‘காகென்ட் கம்யூனிகேஷன்ஸ்’ தனது சேவையை நிறுத்தி உள்ளது. இது ரஷ்ய நாட்டிற்குக் கூடுதல் நெருக்கடியை அளிக்கும் என்று கூறப்படுகிறது.
அவசரப்பட்டுடீங்களே புடின் – உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அதிரடி முடிவு!
நாட்டின் முக்கிய நிறுவனங்களுக்கு இணைய சேவை வழங்கி வரும் ‘
Cogent Communications
‘ தனது சேவையை அதிரடியாக நிறுத்தியுள்ளது, ரஷ்ய நாட்டில் செயல்பட்டு வரும் பெரு நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அரசின் கொள்கை முடிவுகள் தங்கள் தொழிலுக்கு பெரும் பாதகமாக இருக்கிறது என காகென்ட் கருத்து தெரிவித்துள்ளது.
Read more:
ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்ய கணினிகளை துவம்சம் செய்ய ஹேக்கர்கள் முடிவுபணத்தை அள்ளித்தரும் பேஸ்புக்: TikTok-ஐ ஓரங்கட்டி பயனர்களை ஈர்த்த Meta நிறுவனம்!திரும்பி வந்துட்டேன்னு சொல்லு – ‘Truth Social’ ஆப்