அடுத்த ஜூம் கால்..! 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் Better.com சிஇஓ விஷால் கார்க்..!

ஒரேயொரு ஜூம் காலில் சுமார் 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த அமெரிக்காவின் Better.com நிறுவன சிஇஓ விஷால் கார்க் வெறும் 3 மாதத்தில் அடுத்த ஜூம் கால்-க்கு தயாராகியுள்ளது. விஷால் கார்க்-ன் 900 ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கை பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் பல ஊழியர்கள் தானாக நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.

இதனால் ஒட்டுமொத்த நிர்வாகமே தடுமாற்றத்தில் இருக்கும் போது Better.com நிறுவன சிஇஓ விஷால் கார்க் மிகப்பெரிய பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Better.com நிறுவனம்

அமெரிக்காவின் முன்னணி ஹோம்ஓனர்ஷிப் நிறுவனமான Better.com நிறுவன சிஇஓ விஷால் கார்க் 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பின்பு அதிகப்படியான எதிர்ப்புகளைச் சந்தித்த நிலையில், அனைத்து ஊழியர்கள் மத்தியிலும் மன்னிப்பு கேட்டுவிட்டு சில வாரங்களுக்கு விடுமுறைக்குச் சென்றார். இந்த விடுமுறையில் பெட்டர்.காம் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க வேண்டும் என முடிவு செய்தார்.

 இந்தியாவில் ஊழியர்கள்

இந்தியாவில் ஊழியர்கள்

இதன் படி மிகவும் குறுகிய காலகட்டத்திற்குள் அமெரிக்க வர்த்தகத்திற்காக இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களை நியமித்தார். இதன் மூலம் வர்த்தகத்தை எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து சிறப்பான முறையிலும் மிகவும் குறைந்த செலவிலும் வர்த்தகத்தை நடக்கத் துவங்கியது. இந்த இந்திய மாடல் வெற்றிபெற்ற நிலையில் முக்கியமான முடிவை எடுத்துள்ளார் பெட்டர்.காம் சிஇஓ விஷால் கார்க்.

 4000 ஊழியர்களைப் பணிநீக்கம்
 

4000 ஊழியர்களைப் பணிநீக்கம்

தற்போது பெட்டர்.காம் நிறுவனத்தில் இருந்து சுமார் 50 சதவீத ஊழியர்கள் அதாவது 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு வருவதாகவும். அதற்கான பணிகளை விஷால் கார்க் தலைமையிலான நிர்வாகக் குழு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது டெக் கிரன்ச்.

 சாப்ட்பேங்க்

சாப்ட்பேங்க்

கொரோனா காலத்தில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்ற காரணத்தால் பெட்டர்.காம் 6 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் சுமார் 500 மில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை ஜப்பான் சாப்ட்பேங்க் நிறுவனத்திடம் இருந்து ஏப்ரல் 2021ல் பெற்றது.

 Peloton, Better.com

Peloton, Better.com

ஆனால் கொரோனா தொற்றுக்குப் பின்பு வர்த்தகம் பெரிய அளவில் குறைந்த காரணத்தாலும், வட்டி விகிதம் அதிகரித்து விட்டதாலும், இத்துறையில் இருக்கும் Peloton, Better.com ஆகிய இரு நிறுவனமும் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டது. இதனால் Peloton, Better.com ஆகிய இரு நிறுவனமும் அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.

 100 மில்லியன் டாலர் நஷ்டம்

100 மில்லியன் டாலர் நஷ்டம்

கொரோனா கால வர்த்தகத்திற்காக அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் சேர்த்தது. இதனால் கடந்த டிசம்பர் காலாண்டில் மட்டும் சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தைப் பெட்டர்.காம் எதிர்கொண்டு உள்ளது.

ஜூம் காலில் 900 ஊழியர்களைத் துரத்திய Better.com இந்தியாவில் 1000 பேருக்கு வேலை..விஷால் கர்க் முடிவு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Better.com CEO Vishal Garg is planning to layoff 4,000 employees this week

Better.com CEO Vishal Garg is planning to layoff 4,000 employees this week அடுத்த ஜூம் கால்..! 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் Better.com சிஇஓ விஷால் கார்க்..!

Story first published: Tuesday, March 8, 2022, 15:17 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.