ஆந்திரா – சினிமா டிக்கெட் கட்டணம் புதிய அரசாணை வெளியீடு

ஆந்திரா மாநிலத்தில் சினிமா டிக்கெட் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு சினிமா டிக்கெட் கட்டணங்களை ஏற்கெனவே குறைத்திருந்தது. அரசு அறிவித்த கட்டணங்களை மீறி யாரும் வசூலிக்கக் கூடாது என்று கடுமையைக் காட்டியது. அதனால் தெலுங்குத் திரையுலகத்தினர் தங்கள் படங்களின் வசூல் பாதிப்புக்குள்ளாவதாக கவலைப்பட்டனர். அரசுக்கும் பல முறை வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும் அரசு குறைத்த டிக்கெட் கட்டணங்களை பல மாதங்களாகக் குறைக்கவில்லை.

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான சிரஞ்சீவி தலைமையில் பிரபாஸ், மகேஷ் பாபு, ராஜமவுலி உள்ளிட்ட ஒரு குழுவினர் சில வாரங்களக்கு முன்பு ஆந்திர முதல்வரை சந்தித்துப் பேசினர். அதன்பின் டிக்கெட் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று மாற்றியமைக்கப்பட்ட டிக்கெட் கட்டணங்கள் குறித்து அரசாரண வெளியிடப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் கீழே…

மாநகராட்சிகள்

ஏசி இல்லாத பிரிமீயம் தியேட்டர்கள் – 60 ரூபாய்
ஏசி இல்லாத நான் பிரிமீயம் தியேட்டர்கள் – 40 ரூபாய்

ஏசி உள்ள பிரிமீயம் தியேட்டர்கள் – 100
ஏசி இல்லாத நான் பிரிமீயம் தியேட்டர்கள் – 70

சிறப்பு தியேட்டர்கள் பிரிமீயம் – 125
சிறப்பு தியேட்டர்கள் நான் பிரிமீயம் – 100

மல்டிபிளக்ஸ் ரெகுலர் இருக்கைகள் – 150
மல்டிபிளக்ஸ் சாய்வு இருக்கைகள் – 250

நகராட்சிகள்

ஏசி இல்லாத பிரிமீயம் தியேட்டர்கள் – 50 ரூபாய்
ஏசி இல்லாத நான் பிரிமீயம் தியேட்டர்கள் – 30 ரூபாய்

ஏசி உள்ள பிரிமீயம் தியேட்டர்கள் – 80
ஏசி இல்லாத நான் பிரிமீயம் தியேட்டர்கள் – 60

சிறப்பு தியேட்டர்கள் பிரிமீயம் – 100
சிறப்பு தியேட்டர்கள் நான் பிரிமீயம் – 80

மல்டிபிளக்ஸ் ரெகுலர் இருக்கைகள் – 125
மல்டிபிளக்ஸ் சாய்வு இருக்கைகள் – 100

நகர பஞ்சாயத்துகள், கிராம பஞ்சாயத்துகள்

ஏசி இல்லாத பிரிமீயம் தியேட்டர்கள் – 40 ரூபாய்
ஏசி இல்லாத நான் பிரிமீயம் தியேட்டர்கள் – 20 ரூபாய்

ஏசி உள்ள பிரிமீயம் தியேட்டர்கள் – 70
ஏசி இல்லாத நான் பிரிமீயம் தியேட்டர்கள் – 50

சிறப்பு தியேட்டர்கள் பிரிமீயம் – 90
சிறப்பு தியேட்டர்கள் நான் பிரிமீயம் – 70

மல்டிபிளக்ஸ் ரெகுலர் இருக்கைகள் – 100
மல்டிபிளக்ஸ் சாய்வு இருக்கைகள் – 250

இந்த கட்டணங்கள் ஜிஎஸ்டி வரி சேர்க்காமல், ஆனால், ஏசி தியேட்டர்களுக்கு 5 ரூபாய் பராமரிப்பு கட்டணம், நான் ஏசி தியேட்டர்களுக்கு 3 ரூபாய் பராமரிப்பு சேர்த்து வசூலிக்கலாம். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்குமான கட்டணத்தையும் சேர்த்து என அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.