அமராவதி: ஆந்திர சட்டப்பேரவையின் பட் ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆளுநர் உரையைப் புறக்கணித்து தெலுங்கு தேசம் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக 2024-ம் ஆண்டு வரை ஹைதராபாத் தான் ஆந்திராவின் தலைநகரமென நேற்று அமராவதியில் பேரவை கூட்டம் தொடங்குவதற்கு முன், நகராட்சி வளர்ச்சித் துறை அமைச்சர் பி. சத்தியநாராயணா கூறினார். இது தற்போது ஆந்திராவில் புதிய விவாதத்தை கிளப்பி உள்ளது.
அமராவதியில் நேற்று ஆந்திர சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. முன்னதாக, துபாயிலிருந்து ஹைத ராபாத் வந்ததும், மாரடைப் பால் உயிரிழந்த ஆந்திர தொழில் மற்றும் ஐடி துறை அமைச்சர் கவுதம் ரெட்டிக்கு 2 நிமிடம் அவை அஞ்சலி செலுத்தியது.
அதன் பின்னர், ஆளுநர் பிஸ்வபூஷண் ஹரிசந்தன் உரை நிகழ்த்தினார். அப்போது, அவையில் இருந்த எதிர்க்கட்சி யினரான தெலுங்கு தேசம் கட்சியினர் ஆளுநர் உரையை வாசிக்க கூடாது. திரும்பி போக வேண்டுமென கூச்சலிட்டனர். இதனால், அவையில் கடும் கூச்சல் களுக்கிடையே ஆந்திர ஆளுநரின் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது.
ஆளுநரின் உரையினை புறக்கணித்து தெலுங்கு தேசம் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்கிறார். தவறுகளை அவர் தட்டிக்கேட்கவோ, அல்லது சுட்டிக் காட்டுவதோ இல்லை. ஆதலால்தான் ஆளுநரின் உரையை நாங்கள் புறக்கணித் தோமென தெலுங்கு தேசம் கட்சி சார்பில் விளக்கம் கூறப்பட்டது.
இதனிடையே, நேற்று அவை தொடங்குவதற்கு முன், அங்கு வந்த மாநில நகராட்சி துறை அமைச்சர் பி. சத்யநாராயணா செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:
ஆந்திராவில் இருந்து தெலங் கானா மாநிலம் தனியாக பிரிக் கப்பட்ட போது, இன்னமும் 10 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக் கும் என பிரிவினை மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
ஆதலால், வரும் 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஹைதராபாத் தான் ஆந்திராவின் தலைநகர். இதனால்தான் நீதிமன்றங்கள் கூட வேறு தலைநகரை ஏற்றுக் கொள்ள வில்லை. எங்களை பொறுத்தவரை, அமராவதி என் பது சட்டப்பேரவை இயங்கும் ஒரு தலைநகரமாகும்.
இவ்வாறு அமைச்சர் சத்ய நாராயணா கூறினார்.
3 தலைநகரங்கள்
இவர் ஏற்கனவே, ஜெகன் அரசு 3 தலைநகரங்களுக்கு கட்டுப்பட்டு உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை என கூறி வருகிறார். ஆனால், ஆந்திராவிற்கு அமராவதி தான் தலைநகரம் என சமீபத்தில் ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூட அளித்தது.
இந்நிலையில், ஒரு அமைச்சர், உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறி, புதிதாக ஹைதராபாத் தான் வரும் 2024-ம் ஆண்டு வரை ஆந்திராவின் தலைநகரம் என்று மாநில அமைச்சர் கூறியது தற்போது புதிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.