ஆப்பிள்
தயாரிப்புகள் வெளியிடும் நிகழ்வான ‘
apple event
‘ இன்று மார்ச் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இணைய நேரலை வாயிலாக இந்த நிகழ்வு உலகளவில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய தயாரிப்புகளை பயனர்களுக்கு அறிமுகம் செய்கிறது.
தற்போது அந்த தயாரிப்புகள் எவை என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதில், ஆப்பிள் ஐபோன் விரும்பிகளின் வெகு நாள் காத்திருப்பாக இருந்த
iPhone
SE 3, பச்சை நிற
Green iPhone 13
, மேக்புக் ப்ரோ 13, மேக் ஸ்டுடியோ,
iOS
15.4 போன்றவை அறிமுகமாகிறது.
இந்திய நேரப்படி இன்று இரவு 11:30 மணிக்கு ஆப்பிள் நிகழ்வு நேரலை செய்யப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக இணையதளத்தில் இதற்கான பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில் நுழைந்து ஆப்பிள் நிகழ்வை நேரலையில் காண முடியும்.
Flipkart Offer – மலிவு விலையில் Apple iPhone வாங்க நல்ல வாய்ப்பு!
ஆப்பிள் நிகழ்வு 2022 நேரலை நேரம் (apple event 2022 live timing)
டெல்லி, இந்தியா – இரவு 11:30 மணிதுபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – இரவு 9:00 மணிடல்லாஸ், டெக்சாஸ் – நண்பகல் 12:00 மணிஹொனலுலு, ஹவாய் – காலை 7:00 மணிநியூயார்க், நியூயார்க் – நண்பகல் 1:00 மணிஹாலிஃபாக்ஸ், கனடா – நண்பகல் 2:00 மணிலண்டன், இங்கிலாந்து – மாலை 6:00 மணிபெர்லின், ஜெர்மனி – இரவு 7:00 மணி
இந்த நிகழ்வானது, ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக யூடியூப் பக்கத்தில் பக்கத்தில் சென்று பார்க்க முடியும். இந்த வேளையில், வெளியாகும் ஆப்பிள் தயாரிப்புகள் குறித்து விரிவாக காணலாம்.
ஐபோன் எஸ்இ 3 5ஜி
ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை மூன்றாம் தலைமுறை 5G ஸ்மார்ட்போனான iPhone SE 3 இந்த நிகழ்வில் வெளியிடப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் வரிசையில் நல்ல விற்பனையான ஐபோன் எக்ஸ் ஆர் டிசைனை, புதிய ஐபோன் எஸ்இ 3 கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்ச் திரை இதில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், குறைந்தளவு பெசல்களே இந்த ஸ்மார்ட்போன் திரையில் இருக்கும் என்பதையும் தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன. ஐபோன் எஸ்இ 3 (iPhone SE 3) ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேமும், 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரி இருக்கும் என்று தெரிகிறது.
iPhone-ஐ மிஞ்சும் கேமரா… Oppo Find X5 Pro 5G போனில் எல்லாமே ஸ்பெஷல் தான்!
ஏ15 பயோனிக் சிப் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தலைமுறைக்கான 5ஜி ஆதரவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 25,000 ரூபாய் ஐபோன் எஸ்இ 3 ஸ்மார்ட்போனின் தொடக்க விலையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், கூடுதலாக ஐபோன் எஸ்இ ப்ளஸ் மாடலும் வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பச்சை நிற ஐபோன் 13 ‘Green iPhone 13’
ஐபோன் 12 அறிவிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு ‘Apple Spring Event 2021’ நிகழ்வின்போது, புதிய ஊதா நிற ஆப்பிள் ஐபோன் 12 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அதேபோல, இந்த ஆண்டும் பச்சை நிறத்திலான ஐபோன் 13 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம் என உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mac Studio மற்றும் Studio Display
இந்த நிகழ்வில் மேக் ஸ்டுடியோ என அழைக்கப்படும் புதிய மேக் கணினி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூடியூபர் லூக் மியானியின் அறிக்கைபடி, இது சக்திவாய்ந்த மேக் மினி அல்லது சிறிய மேக் ப்ரோ ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த நிகழ்வில் புதிய XDR ப்ரோ டிஸ்ப்ளே அறிமுகமாக வாய்ப்பிருக்கிறது.
புதிய 13 இன்ச் மேக்புக் ப்ரோ
ஆப்பிள் நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் மற்றொரு தயாரிப்பு 13-இன்ச்
MacBook Pro
ஆகும். சில தகவல்களின்படி, புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப் புதிய M2 சிப்பைப் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த தயாரிப்பு குறித்து இன்னும் அதிகம் தகவல்கள் கிடைக்கவில்லை என்பதால், இது M2 சிப் கொண்டு இயங்கும் MacBook Air உடன் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் MagSafe கேசஸ்
பல்வேறு வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன்களுக்கான MagSafe கேசஸ் வெளியாகலாம் எனவும் தெரிகிறது. புதிதாக லைட் நீலம், ஆரஞ்சு, டார்க் டர்க்கைஸ் ஷேட் போன்ற பல வண்ணங்களில் வெளியாகலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன.
iOS 15.4, macOS Monterey 12.3 வெளியீட்டு தேதிகள்
ஆப்பிள் iOS 15.4, iPadOS 15.4 மற்றும் macOS Monterey 12.3 ஆகிய ஆப்பிள் தயாரிப்புகளின் இயங்குதளங்களை நிறுவனம் சோதித்து வருகிறது. இந்த இயங்குதளங்களின் மேம்பட்ட பதிப்பு வெளியாகும் தேதி குறித்து, இந்த நிகழ்வில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Read more:
Metaverse போன் கேள்வி பட்டிருக்கீங்களா – தொழில்நுட்ப புரட்சி
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘Nothing’ டீஸர்!
iPhone-ஐ மிஞ்சும் கேமரா…