பெலகாவி-போர் பாதிப்புள்ள உக்ரைனிலிருந்து, இந்தியர்களை பாதுகாப்பாக தாய்நாட்டுக்கு அழைத்து வந்த ‘ஏர் இந்தியா’ பைலட் திஷா மன்னுர், கர்நாடகாவின் பெலகாவி மருமகள் என்பது தெரிய வந்துள்ளது.குஜராத்தின் புஜ் பகுதியை சேர்ந்த திஷா, விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றவர். இவர் 2015ல், பைலட் ஆதித்யா மன்னுரை திருமணம் செய்து கொண்டார். ஆதித்யா, கர்நாடக மாநிலம், பெலகாவியை சேர்ந்த பிரஹலாத் மன்னுர், பத்மஜா தம்பதியரின் மகன். இந்த பைலட் தம்பதி, தற்போது டில்லியில் வசிக்கின்றனர். ஏர் இந்தியாவில் பணியாற்றும் திஷா, பிப்ரவரி 22ல், டில்லியிலிருந்து போர் நடக்கும் உக்ரைனின் தலைநகர் கீவ் நகருக்கு விமானத்தில் பறந்து, 242 இந்தியர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வந்த, ஐந்து பைலட்டுகளில் ஒருவர்.திஷா இது போன்ற முக்கியமான பணிகளில் அவ்வப்போது ஈடுபட்டுள்ளார். கொரோனா தொற்று பரவிய நேரத்தில் இந்த பைலட் தம்பதி, மருத்துவ ஆக்சிஜனை கொண்டு வர, அமெரிக்கா, ஹாங்காங், பாரிஸ், சிங்கப்பூருக்கு விமானத்தை இயக்கினர்.திஷா கூறியதாவது:உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைக்கு என்னை தேர்வு செய்தது மகிழ்ச்சியான விஷயமாகும். நாட்டின் மாணவர்கள், பயத்தில் இருந்த பெற்றோருக்காக, ஏதாவது எனக்கு திருப்தியளிக்கிறது.மற்ற விமானங்கள், மாணவர்களை இடமாற்ற, புகாரெஸ்ட், புடாபெஸ்டில் தரையிறங்கின. உக்ரைனிலேயே விமானத்தை தரையிறக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.முதலில் எனக்கு பயம் இருந்தது. ஆனால் இந்திய அரசு, ஏற்கனவே பேச்சு நடத்தியுள்ளது. எந்த தொந்தரவும் ஏற்படாது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement