ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமானது தொடர்ந்து 13வது நாளாகவும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.
ஏற்கனவே இரு நாட்டு பிரதிநிதிகளும் இரு முறை பேச்சு வார்த்தை நடத்தினர். எனினும் இதுவரையில் கைகொடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் நாளை மறுதினம் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.
ரஷ்யாவின் இந்த போக்கினை கண்டித்து பல நாடுகளும் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.
அந்த மனசு தான் சார் கடவுள்.. உக்ரைன் மக்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் நெட்டிசன்ஸ்..!
எண்ணெய் வணிகத்திற்கு தடை
அமெரிக்க, கனடா, ஐரோப்பிய நாடுகள் பலவும், ரஷ்யாவின் முக்கிய வணிகமாக இருக்கும் கச்சா எண்ணெய் வணிகத்திலேயே கைவைத்துள்ளன. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை தடை செய்துள்ளன. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் பெரும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்கப்படுகிறது. இது ஒரு புறம் ரஷ்யாவுக்கு பிரச்சனை தான் என்றாலும், மறுபுறம் மற்ற உலக நாடுகளுக்கும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
விலை அதிகரிப்பு
ஏற்கனவே சமையல் எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலையானது, பெரும் உச்சத்தினை எட்டியுள்ளது. கச்சா எண்ணெய் விலையும் தாறுமாறாக உச்சத்தினை எட்டியுள்ளது. இது அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு பெரும் பிரச்சனையாகவும் மாறியுள்ளது.
பற்றாக்குறை ஏற்படலாம்
இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் சமையல் எண்ணெய் மற்றும் எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்ற ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே இந்தியர்கள் சமையல் எண்ணெய் மற்றும் எரிபொருள்களை வாங்கி சேமிக்க தொடங்கி விட்டனர். இப்படி உலகளாவிய பிரச்சனைகளுக்கு மத்தியில், இந்தியாவில் 5 மாநில தேர்தல்களும் முடிவடைந்துள்ளன. இதனால் இதுவரையில் எரிபொருள் விலையினை கட்டுக்குள் வைத்திருந்த மத்திய அரசு, இனி விலையை அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைனில் இருந்து இறக்குமதி
இந்தியா தனது சன்பிளவர் ஆயில் இறக்குமதியில் 90% மேலாக உக்ரைன் – ரஷ்யாவில் இருந்து தான் இறக்குமதி செய்கின்றது. எனினும் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் சன்பிளவர் ஆயில் 14% என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
போதுமான சப்ளை உள்ளது
இதற்கிடையில் சன்பிளவர் ஆயில் இறக்குமதியில் பிரச்சனை இருந்தாலும், சோயா, பால்ம் ஆயில், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்டவற்றின் சப்ளை போதுமானதாக உள்ளது. ஆக மக்கள் பீதி அடைய தேவையில்லை என்று மும்பை சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் பிவி மேத்தா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை நிலவரம்
பல மாநிலங்களில் தேர்தல் நடக்கவிருந்த நிலையில் நவம்பர் 4ல் இருந்து எரிபொருள் விலையானது அதிகரிக்கவில்லை. இந்த நிலையில் லிட்டருக்கு 15 – 20 ரூபாய் வரையில் எரிபொருள் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சிறிது காலத்தில் குளிர்காலத்தில் விதைக்கப்பட்ட பயிர்களின் அறுவடையானது தொடங்கும். இதன் காரணமாக டீசல் தேவையானது அதிகரிக்கலாம். இது விலையினை ஊக்குவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Russia – ukraine war: indian’s stocks up cooking oil and fuel amid fearing shortages
Russia – ukraine war: indian’s stocks up cooking oil and fuel amid fearing shortages/இந்தியர்களுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. பற்றாக்குறை ஏற்படுமோ.. வாங்கி குவிக்கும் மக்கள்!