புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா 3-வது அலை முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் சரிந்தது.
இந்தியாவில் ஒரே நாளில் 3,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,29,67,315 லிருது 4,29,71,308 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 8,055 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,23,09 லிருந்து 4,24,06,150 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு 108 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 210 ஆக உயர்ந்தது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 49,948 ஆக குறைந்தது.
இந்தியாவில் ஒரே நாளில் 21,34,463 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 179,13 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.