Tamilnadu youth joins Ukraine army to fight Russia invasion: தமிழகத்தைச் சேர்ந்த 21 வயதான விண்வெளி பொறியியல் மாணவர், உக்ரைனுக்காக ரஷ்யாவிற்கு எதிராக போராடி வருவதாக மத்திய மற்றும் மாநில அரசுளின் உளவுத்துறை அறிக்கை கூறுகிறது.
கோவை மாவட்டம் துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்த சைனிகேஷ் ரவிச்சந்திரன் என்ற மாணவர், 2018 இல் தனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, இந்திய ராணுவத்தில் சேர முயன்றார், ஆனால் உயரம் காரணமாக ராணுவத்தில் சேர முடியவில்லை. அவர் இரண்டு முறை முயற்சித்தும் ராணுவத்தில் சேர முடியவில்லை. பின்னர், அவர் ஒருமுறை சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை அணுகி, அமெரிக்க ராணுவத்தில் சேர வாய்ப்பு உள்ளதா என்று தெரிந்து கொள்ள முயன்றுள்ளார். அங்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தன்னால் ராணுவத்தில் சேர முடியாது என்பதை உணர்ந்த சைனிகேஷ் ரவிச்சந்திரன், 2018 இல் உக்ரைனின் கார்கிவில் உள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, சைனிகேஷ் ரவிச்சந்திரன் ஒரு வீடியோ கேம் மேம்பாட்டு நிறுவனத்தில் பகுதி நேர வேலை கிடைத்ததாகக் கூறினார் என்று அவரது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தநிலையில், சைனிகேஷ் ரவிச்சந்திரன் வீட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு உளவுத்துறையினர் சென்று அவரது பெற்றோரை சந்தித்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, உக்ரைனுக்காக ஆயுதம் ஏந்துவதற்கான அவரது முடிவிற்கான அவரது குடும்பப் பின்னணி, நடத்தை மற்றும் சாத்தியமான காரணத்தை விவரிக்கும் அறிக்கையை அவர்கள் சமர்ப்பித்தனர்.
இதையும் படியுங்கள்: உக்ரைனில் இருந்து இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 1340 பேர் மீட்பு: அமைச்சர் மஸ்தான் தகவல்
அப்போது, அவரது குடும்பத்தினர் அவரை வீட்டிற்குத் திரும்பும்படி சமாதானப்படுத்த முயன்றனர், ஆனால் சைனிகேஷ் ரவிச்சந்திரன் மறுத்துவிட்டார் என்று குடும்ப நண்பர் கூறினார்.
“யுத்தம் வெடித்தபோது, நான்கு நாட்கள் அவர் தலைமறைவாக இருந்தார். அப்போதுதான் தமிழக இளைஞர் ஒருவர் உக்ரேனியப் படையில் சேருவதைப் பற்றிய செய்தியைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம், ”என்று குடும்ப நண்பர் கூறினார்.
சைனிகேஷ் ரவிச்சந்திரன், உக்ரைனின் ஜார்ஜிய தேசிய படையணி துணை ராணுவப் பிரிவின் தன்னார்வலர்களை உள்ளடக்கிய ஒரு பிரிவில் பணிபுரிவதாக உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன.