அதிக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட நாடாக தற்போது ரஷ்யா உள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யா மீதான புதிய தடைகள் அதிகரிக்கப்பட்டது. பல தொழில் துறை நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும், ரஷ்யாவின் மீதான தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரான், வடகொரியாவைவிட, ரஷ்யா பொருளாதாரத் தடைகள் அதிகம் விதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா மாறியுள்ளது.
உக்ரைனை ஆக்கிரமித்த 10 நாட்களுக்குள், ரஷ்யா உலகின் அதிக பொருளாதாரத் தடைகள் பெற்ற நாடாக மாறியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்புக்குப்பிறகு, ரஷ்யா 2,778 புதிய பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டது, மொத்தமாக, 5,530 பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் மீது உள்ளது என்று உலகளாவிய பொருளாதாரத் தடைகள் கண்காணிப்புத் தரவுத்தளமான `Castellum.ai’ தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஈரான் மற்றும் வடகொரியாவைவிட அதிகம்.
கடந்த நூறு ஆண்டுகளில், அணுசக்தித் திட்டம் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரித்தற்கு எதிராக ஈரான் மீது 3,616 தடைகள் போடப்பட்டது. சிரியா மீது 2,608 தடைகள் மற்றும் வடகொரியா மீது 2,077 தடைகள் உள்ளன. இந்த நிலையில், உக்ரைன் மீதான போருக்குப்பின் ரஷ்யா மீது 2,778 புதிய பொருளாதாரத் தடைகள் உள்ளன.