உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் 12 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சீனாவின்
குளோபல் டைம்ஸ்
என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு செய்தி உலக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியா ரஷியாவுக்கு ஆதரவாக இருப்பதாக வெளியான செய்திதான் பரபரப்பு காரணம். ரஷியாவிற்கு ஆதரவு தெரிவிப்பதை வெளிப்படுத்தும் விதமாக, டெல்லியில் உள்ள குதுப்மினாரில் ரஷிய கொடியை பிரதிபலிக்கும் வகையில் ஒளிவிளக்குகளால் இந்திய அரசு அலங்கரித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது என் ஊரு.. யாருக்கும் பயப்பட மாட்டேன்… சண்டை செய்வேன்: உக்ரைன் அதிபர்!
இந்நிலையில் இந்த செய்தி உண்மை புறம்பானது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் நிகழ்ச்சி ஒன்றிருக்காக அந்த அலங்கரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றும், அது ரஷியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இல்லை எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.