உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக உலகிலேயே அதிக தடைகள் பெற்ற நாடாக ரஷ்யா உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து பொருளாதார தடைகள் கண்காணிப்பு தளமான கேஸ்டெலம் டாட் ஏஐ (Castellum.AI) வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைனின் டோனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகியவற்றை தன்னாட்சி பிரதேசமாக புதின் அறிவித்த அடுத்த நாளில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யா மீது முதன்முறையாக பொருளாதார தடைகளை விதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 24ஆம் தேதியன்று உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா அறிவித்த பிறகு, பல பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 22க்கு முன் ரஷ்யாவிற்கு எதிராக நடைமுறையில் இருந்த தடைகள், படையெடுப்பிற்கு பிறகு விதிக்கப்பட்ட தடைகள் என அந்நாட்டின் மீது மொத்தம் 5 ஆயிரத்து 532 தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.