டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண், 100 கிலோ கேக் தயாரித்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் பிராச்சி தாபல் தேப்,30. இவர், பிரிட்டனில் உள்ள கேக் கலைஞர் எடீ ஸ்பென்ஸ் என்பவரிடம் கேக் தயாரிக்கும் கலையை பயின்றுள்ளார். அதிலும், ‘ராயல் ஐசிங்’ எனப்படும் மிகவும் நுணுக்கமான வடிவமைப்புகள் கொண்ட கேக் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.
தற்போது, ஐரோப்பிய நாடான இத்தாலியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தை, 6 அடி, 4 அங்குல நீளம்; 4 அடி 6 அங்குல உயரம்; 3 அடி 10 அங்குல அகலத்தில், 100 கிலோ எடையில் கேக்கில் படைத்துள்ளார். பிராச்சியின் இந்த படைப்பு, ‘வேர்ல்ட் புக் ஆப் ரிகார்ட்ஸ்’ எனப்படும், உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.பொதுவாக கேக் என்றாலே முட்டை பயன்படுத்தப்படும். ஆனால், உலக சாதனைக்காக தயாரிக்கப்பட்ட இந்த கேக், முட்டை பயன்படுத்தாமல், முற்றிலும் சைவ கேக்காக தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இதன் மற்றொரு சிறப்பு.
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண், 100 கிலோ கேக் தயாரித்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.உத்தரகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் பிராச்சி தாபல் தேப்,30. இவர்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.