லக்னோ,
உத்தரபிரதேசத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் எனவும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்து உள்ளன.
இந்தநிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ்,
“கருத்துக்கணிப்பில் அவர்களுக்கு கிடைத்ததை காட்டட்டும், உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும்”எனக் கூறினார்.
நேற்றுடன் உத்தரப் பிரதேசத்தில் 7 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றது. வரும் மார்ச் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.