என் வீட்டை யாராலும் தொட முடியாது.. சவால் விடும் விஜய் மல்லையா..!

இந்திய வங்கிகளில் கடனை வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்றவர்களில் மிகவும் முக்கியமானவர் கிங்பிஷர் நிறுவனத்தின் நிறுவனரான விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான அசையும் அசையாகச் சொத்துக்களை இந்திய அரசு தொடர்ந்து கைப்பற்றி வருகிறது.

இந்நிலையில் விஜய் மல்லையாவின் லண்டன் ஆடம்பர வீட்டை கைப்பற்றத் திட்டமிட்டு வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு விஜய் மல்லையாவுக்குச் சாதகமாக வந்துள்ளது.

ரூ.29 லட்சம் கோடி இழப்பு.. இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கண்ணீர்.. என்ன காரணம்..?!

 விஜய் மல்லையா

விஜய் மல்லையா

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமாக மத்திய லண்டன் பகுதியில் இருக்கும் கார்ன்வால் டெரஸ் சொத்து அவருடைய பெயரில் இல்லை, இதற்கு மாறாகப் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் இருக்கும் ரோஸ் கேபிடல் வென்ச்சர்ஸ் (ஆர்சிவி) நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

 ரோஸ் கேபிடல் வென்ச்சர்ஸ்

ரோஸ் கேபிடல் வென்ச்சர்ஸ்

இந்த ரோஸ் கேபிடல் வென்ச்சர்ஸ் (ஆர்சிவி) நிறுவனத்திற்கும் மல்லையா குடும்ப அறக்கட்டளையுடன் தொடர்புடையது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடம்பர வீட்டை விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் வாங்கிய கடனுக்காகக் கைப்பற்ற வழக்குத் தொடுத்த போது தீர்ப்பு மல்லையாவுக்கும், அவருடை குடும்ப அறக்கட்டளைக்கும் சாதகமாக அமைந்துள்ளது.

 உலகளாவிய முடக்கம் உத்தரவு
 

உலகளாவிய முடக்கம் உத்தரவு

வங்கி கடனுக்குப் பணம் செலுத்தவில்லை எனில் ஒரு குடும்ப அறக்கட்டளை நிறுவனத்தால் அக்கடனை ரீபைனான்சிங் செய்வது உலகளாவிய முடக்கம் உத்தரவு (WFO) விதிமுறையை மீறாது என்று இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, விஜய் மல்லையாவின் குடும்பம் லண்டன் வீட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் எனப் பிரிட்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 UBS வங்கி கடன்

UBS வங்கி கடன்

விஜய் மல்லையா, அவரது தாய் லலிதா மல்லையா, மகன் சித்தார்தா மல்லையா ஆகியோர மார்ச் 2017 இல், சுவிஸ் UBS வங்கியில் வாங்கிய கடனுக்கான ஐந்தாண்டு கால அவகாசம் முடிவடைந்தது. இந்த நிலையில் RCV நிறுவனத்தின் மூலம் 2.4 மில்லியன் பவுண்ட் அளவிலான கடனுக்கான தொகையை அளித்துவிட்டு (ரீபைனான்சிங்) கார்ன்வால் டெரஸ் சொத்தை கைப்பற்றியது.

 மூவர்

மூவர்

இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்த முக்கிய நபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் மீதான வழக்கில் வங்கிகளுக்கு 18,000 கோடி ரூபாய் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலான துஷார் மேத்தா உச்ச நீதிமன்ற பெஞ்சில் சில நாட்களுக்கு முன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Vijay Mallya family to hold on to plush London home

Vijay Mallya family to hold on to plush London home என் வீட்டை யாராலும் தொட முடியாது.. சவால் விடும் விஜய் மல்லையா..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.