புலம்பெயர்ந்து தொழில் செய்யும் இலங்கையர்கள், இலங்கையிலுள்ள தங்களின் குடும்பத்தாருக்கு அனுப்புகின்ற ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் ரூ.38 வரை உக்கத்தொகை சேர்த்து வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அரிவித்துள்ளது.
வருடம்தோரும் இலங்கை புத்தாண்டு ஏப்ரல் மாதம் 13 அல்லது 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன்படி வரவிருக்கும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாட்டிற்கு சென்று தொழில்புரிபவர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்கி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
அது என்னவென்றால், இலங்கை தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கையிலுள்ள தனது குடும்பத்தினருக்கு அனுப்பும் அமெரிக்க டாலர் ஒன்றுக்கு ரூ.38 ஊக்கத்தொகை சேர்த்து வழங்குவதற்கு பரிந்துரைத்திருந்தார்.
மேலும் படிக்க | Good News சுவிட்சர்லாந்தில் குடியுரிமையும், வேலை வாய்ப்பும் – முழு விவரம்
அந்தப் பரிந்துரைக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஊக்கத்தொகையானது அமெரிக்க டாலர் ஒன்றிற்கு ரூ. 10 ஆக உள்ளது.
இதுக்குறித்து வெளியான அறிவிப்பில், இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்ற முக்கிய துறையாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இதன்மூலம் வருடாந்திரம் 7-8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இலங்கை நாட்டிற்கான பணவரவாகக் கிடைக்கிறது.
அவ்வாறு புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் சம்பாதிக்கும் அந்நிய செலவாணியை எதிர்வரும் புதுவருட காலத்தில் இலங்கைக்கு அணுப்புவதை ஊக்குவிக்கும் விதமாகவும், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அதிக பொருளாதார பலன்கள் கிடைப்பதற்காகவும் அவர்கள் இலங்கைக்கு அனுப்புகின்ற ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் தற்போது செலுத்தப்பட்டு வரும் 10 ரூபாய் உக்கத்தொகையானது ரூ.38 வரை அதிகரித்து வழங்கப்படும் என தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | குண்டு மழைக்கு நடுவே முத்த மழை… போர்க்களத்தில் நடந்த திருமணம்..