புதுடில்லி :கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய்க்கு 300 டாலர் வரை அதிகரிக்கும் என ரஷ்யா அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட, 23 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. தற்போது ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 127 டாலராக இருக்கும் நிலையில், இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக, அமெரிக்கா தெரிவித்ததை அடுத்து, ரஷ்யா இவ்வாறு அறிவித்துள்ளது.
ரஷ்ய எண்ணெயை நிராகரிக்கும் பட்சத்தில், அது உலக சந்தையில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பீப்பாய் 300 டாலருக்கும் அதிகமாக கூட விலை ஏறலாம் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்தியாவில், 1 லிட்டர் பெட்ரோல், டீசல் விலை 15 ரூபாய் வரை அதிகரித்தால் மட்டுமே, எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை தவிர்க்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
புதுடில்லி :கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய்க்கு 300 டாலர் வரை அதிகரிக்கும் என ரஷ்யா அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட, 23 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.