உக்ரைன் – ரஷ்யா இடையே போர் சூழல் தொடர்ந்து வருகிறது. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை வரை வந்துள்ள நிலையில், உக்ரைனில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இவ்வளவு ரணகளத்திலும் போர்க்களத்தில் திருமணம் செய்து வருகிறார்கள் உக்ரைன் ராணுவ வீரர்கள். பாதுகாப்பு படை வீரர்களான வலேரி மற்றும் லெஸ்யா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.
Сьогодні вітав бійців одного з батальйонів тероборони столиці Лесю та Валерія. Вони давно живуть в цивільному шлюбі, а тепер вирішили обвінчатися. Церемонія відбулася поруч з одним із блок-постів.
Життя триває! І життя Києва, киян, нашої держави ми будемо захищати! pic.twitter.com/ys2kNN12Ws
— Віталій Кличко (@Vitaliy_Klychko) March 6, 2022
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த ஜோடி உக்ரைன் தலைநகரில் ராணுவ உடையுடன் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறும் வகையில் முத்த மழை பொழிந்து கொண்டனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குண்டு மழை பொழிந்து வரும் ரத்த பூமியில் இந்த முத்த மழை பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.
This couple, Lesya and Valeriy, just got married next to the frontline in Kyiv. They are with the territorial defense. pic.twitter.com/S6Z8mGpxx9
— Paul Ronzheimer (@ronzheimer) March 6, 2022
உக்ரைன் தலைநகர் கீவ்வின் மேயரும், முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியனுமான விட்டலி கிளிட்ச்கோ இந்த ஜோடியை நேரில் சென்று வாழ்த்தினார். அதன்பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட விட்டலி, “பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக பணிபுரிந்த லெஸ்யா மற்றும் வலேரியின் திருமணம் தலைநகரில் நடைபெற்றது. இந்த ஜோடியை வாழ்த்துகிறேன்” என்று திருமண வீடியோவை பகிர்ந்து ட்வீட் செய்துள்ளார்.
மேலும் படிக்க | மைனஸ் 2 டிகிரி குளிரில் நடந்தோம் – உக்ரைனிலிருந்து தப்பித் மயிலாடுதுறை மாணவி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR