திருவனந்தபுரம்:கேரளாவில் செயல்படும் ‘108’ ஆம்புலன்ஸ் சேவையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதல் பெண் டிரைவர்நியமிக்கப்பட்டு உள்ளார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.மாநிலத்தில் விபத்துகளால் பாதிக்கப்படும் மக்களின் உயிர்காக்கும் பணியில், ‘108’ ஆம்புலன்ஸ் சேவை செயல்படுகிறது. இவற்றில், ஆண்கள் மட்டுமே டிரைவர்களாக உள்ளனர்.இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த தீபாமோள் என்பவர், ஆம்புலன்ஸ் டிரைவராக நேற்று நியமிக்கப்பட்டு உள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில், தீபாமோளிடம் ஆம்புலன்ஸ் சாவியை வழங்கிய மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:பல்வேறு மாவட்டங்களிலும், ஆர்வமுள்ள பெண்களை ஆம்புலன்ஸ் டிரைவர்களாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
திருவனந்தபுரம்:கேரளாவில் செயல்படும் ‘108’ ஆம்புலன்ஸ் சேவையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதல் பெண் டிரைவர்நியமிக்கப்பட்டு உள்ளார்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.