ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் உலக நாடுகள் தற்போது அதிகப்படியான கச்சா எண்ணெய் விலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்யா-வை மொத்தமாக முடக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவும் ஐரோப்பாவும் இணைந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மீது தடை விதிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதில் கடுப்பான ரஷ்யா மேற்கத்திய நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ரஷ்யா எண்ணெய் மற்றும் எரிவாயு மீது கைவைத்தால் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 300 டாலர் வரையில் உயரும் என எச்சரித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியிலும் சீனாவின் பலே திட்டம்.. இப்ப கூட இப்படி தானா?
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இணைந்து ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்வது குறித்துப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் கூறியதை அடுத்து, திங்களன்று கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத வரையில் ஒரு பேரல் 130 டாலர் வரையில் உயர்ந்து 2008 அளவீட்டை தொட்டது.
அலெக்சாண்டர் நோவாக்
ரஷ்ய எண்ணெய் நிராகரிப்பு உலகளாவிய சந்தையில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்பது முற்றிலும் தெளிவாக உள்ளது” என்று ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் அரசு தொலைக்காட்சியில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ரஷ்யா எண்ணெய் மற்றும் எரிவாயு மீது தடை விதித்தால் ரஷ்யா – ஜெர்மனி எரிவாயு பைப்லைன் மூடப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
ஒரு பேரல் 300 டாலர்
இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை உயர்வு கணிக்க முடியாததாக இருக்கும், குறைந்தது ஒரு பேரல் 300 டாலராக உயரலாம். ரஷ்யாவிடம் இருந்து பெறும் எண்ணெய் அளவை மாற்றுவதற்கு ஐரோப்பா-விற்கு ஒரு வருடத்திற்கும் மேலாகத் தேவைப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில் கச்சா எண்ணெய்க்கு அதிகத் தொகையைக் கொடுக்கக் கொடுக்க வேண்டும் என்றும் நோவாக் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பா
மேலும் ஐரோப்பாவின் எரிவாயு தேவையைச் சுமார் 40 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து தான் பெற்று வருகிறது, தற்போது ரஷ்யா இயற்கை எரிவாயு மீது தடை விதித்தால் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் கடுமையாகப் பாதிக்கப்படும்.
தடையில்லை
மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது தற்போது அனைத்து சேவைகளுக்கும் பொருட்களுக்கும் தடை விதித்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கு மட்டுமே தடை விதிக்கப்படாமல் இருக்கிறது.
ரஷ்யா-வின் கஜானா
இந்நிலையில் அமெரிக்க அரசு தற்போது ரஷ்யா-வுக்கு அதிக வருமானத்தை அளிக்கும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்குத் தடை விதிக்க ஐரோப்பிய நாடுகள் உடன் ஆலோசனை செய்து வருகிறது.
கச்சா எண்ணெய் உற்பத்தி
ரஷ்யா ஒரு நாளைக்கு 11 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. இதில் பாதி உற்பத்தியை உள்நாட்டு தேவைக்காகப் பயன்படுத்தி வரும் நிலையில் 5 மில்லியன் முதல் 6 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ரஷ்யா ஆதிக்கம்
கச்சா எண்ணெய் உற்பத்தியில் தற்போது உலகளவில் ரஷ்யா 2வது இடத்தில். முதல் இடத்தில் சவுதி அரேபியா, 3வது இடத்தில் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது. ரஷ்யா 2021ஆம் ஆண்டில் மட்டும் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தின் வாயிலாகச் சுமார் 110 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை ஈட்டியுள்ளது.
Russia warns Western countries oil may cross $300 per barrel, Treats to cuts EU gas supply
Russia warns Western countries oil may cross $300 per barrel, Treats to cuts EU gas supply அமெரிக்கா, ஐரோப்பாவை எச்சரிக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் நிலைமை என்ன..?!