மகளிர் தினத்தை முன்னிட்டு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண் மருத்துவர்களின் சேவைகளை பாராட்டி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பரிசு மற்றும் கேடையங்களை வழங்கினார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள கலையரங்கில் மகளிர் தின விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவினை மாண்புமிகு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவ சேவைகள் துறையின் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய பெண் மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களின் சேவைகளை பாராட்டி கேடயங்களை வழங்கினார்.
தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பெண் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், நடனம், பாடல், கவிதை, சிலம்பாட்டம், பறையிசை நடனம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.