சென்னை:
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:
தமிழக சட்டசபை கூட்டத் தொடர், வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தொடங்குகிறது.
அன்றைய தினம், நிதி மந்திரி ( பழனிவேல் தியாகராஜன்) பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். அதோடு 2022-2023 ஆண்டுக்கான முன் பண மானியக் கோரிக்கை 24ம் தேதி தாக்கல் செய்யப்படும்.
பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் என்னுடைய தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இதில் பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். மானியக் கோரிக்கையை நடத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…
சசிகலாவால் எழுந்துள்ள திடீர் சர்ச்சை: ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி ஆலோசனை