நாடக காதலனிடம் சிக்கிய காயத்திரி., கிருஸ்துவ தேவாலயத்தில் தாலிகட்டி., ஹோட்டல் அறையில் முடிந்த சம்பவம்.!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்ல் படுக்கையறையில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அந்த இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஜோஸ்கோ நகை கடையில் பணிபுரியும் பிரவீன் என்பவரின் பெயரில் அந்த ஹோட்டல் அறை முன் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும், போலீசார் விசாரணை செய்ததில் ஜோஸ்கோ நகைக்கடையில் நடைபெற்ற நாடக காதல் + கள்ளகாதல் கொலை விவகாரம் அம்பலமாகியுள்ளது.

திருவனந்தபுரம் ஜோஸ்கோ நகைக்கடையின் வரவேற்பாளர் ஆக பணிபுரிந்து வந்தவர் காயத்ரி. இவர் மீது ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான பிரவீன்-க்கு காதல் ஏற்பட்டுள்ளது. இவரின் காதலை ஏற்றுக் கொண்ட காயத்ரியும், ஒன்று சேர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இவர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கவே, அதனை பார்த்த மனைவி அதிர்ச்சி அடைந்து ஜோஸ்கோ நிர்வாகத்திடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார்.

இதனையடுத்து, திருவனந்தபுரம் ஜோஸ்கோ கடையில் இருந்து திருவண்ணாமலை ஜோஸ்கோ கடைக்கு பிரவீனை பணியிடை மாற்றம் செய்தும், காயத்திரியை பணியில் இருந்து நீக்கம் செய்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து.

கள்ளகாதலால் வெளிபறிபோன காயத்திரி, பிறவினிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தி வந்துள்ளார். அதற்க்கு பிராவின் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் கிறிஸ்துவ சர்ச் எதிரில் நின்று, காயத்ரிக்கு தாலி ஒன்றையும் பிரவீன் கட்டியுள்ளார். மேலும் இதனை போட்டோவும் எடுத்து வைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தனது திருமணத்தை தனது தோழிகளுக்கு தெரியப்படுத்தும் விதமாக, பிராவின் தாலிகட்டும் அந்த போட்டோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இந்த ஸ்டேட்டஸ் போட்டோவ விவகாரம் ஜோஸ்கோ கடை நிர்வாகத்துக்கும் தெரியவரவே, தன்னை காப்பாற்றிக்கொள்ள மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார் பிரவீன்.

அதன்படி திருவனந்தபுரம் ஹோட்டலில் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிய பிரவின், பின்னர் காயத்ரியை தனது அறைக்கு வரவழைத்து, அவரை அங்கு கழுத்தை நெரித்து கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, பிரிவினை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.