பகவத் கீதை கேட்ட NSE சித்ரா ராமகிருஷ்ணா.. சிபிஐ கைதுக்கு பின் நடந்தது என்ன..?

இந்தியாவின் மிகப்பெரிய பங்கு சந்தையில் ஒன்றான தேசிய பங்கு சந்தையில் நடந்த முறைகேடுகள், பங்கு சந்தை முதலீட்டாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சர்வதேச அளவில் இன்றும் முக்கிய எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றாக இருந்து வரும் தேசிய பங்கு சந்தையில், அன்னிய முதலீடுகளும் பெரியளவில் இருந்து வருகின்றது.

இப்படி ஒரு மாபெரும் நம்பகமான எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றாக இருந்து வரும் NSEயில், முக்கிய முடிவுகள் அனைத்தும் ஒரு சாமியாரின் முடிவினைக் கேட்ட பிறகு அறிவிக்கப்பட்டவை என்பது தான் முதலீட்டாளர்களை அதிர வைத்தது.

வாரத்தில் 2 நாள் கட்டாயம்.. ஐடி ஊழியர்களுக்கு வந்தது புதிய உத்தரவு..! #WFH

அரங்கேறிய  மோசடிகள்

அரங்கேறிய மோசடிகள்

என்.எஸ்.இயின் நிர்வாக இயக்குனராக 2013 – 2016 வரையில் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி கூறியுள்ளது. குறிப்பாக என்.எஸ்.இயின் முக்கிய முடிவுகள் அனைத்தும் யாரோ ஒரு இமயமலை சாமியாரின் பேச்சை கேட்டு நடந்துள்ளது. அனுபவமில்லாத ஆனந்த் சுப்ரமணியன் பணியமர்த்தல் என்.எஸ்.இ ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

சோதனை

சோதனை

அதன் பிறகு சில ஆண்டுகளுக்கு கோடிக் கணக்கில் சம்பளம், பல சலுகைகளையும் வாரி வழங்கியுள்ளார். இதனையடுத்து தான் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்னதாக சித்ரா, ஆனந்த் ஆகியோருக்கு தொடர்புடைய அனைத்து அலுவலகங்கள், வீடுகளில் சோதனையும் நடத்தப்பட்டது.

3 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ்
 

3 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ்

என்எஸ்இ விவரங்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நரேன் மற்றும் அவரது சகோதரர் ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோருக்கு எதிராக சிபிஐ, கடந்த மாதம் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது. லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் மூவரில் யாரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்பதை உறுதி செய்வதற்காக எல்ஓசியும் பிறப்பிக்கப்பட்டது.

சித்ரா ராமகிருஷ்ணன் கைது

சித்ரா ராமகிருஷ்ணன் கைது

இதன் பிறகு தான் ஆனந்த் சுப்பிரமணியம் கடந்த மாத இறுதியில் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் சித்ரா ராமகிருஷ்ணா முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் முன் வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி முன்ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதன் பிறகே முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா டெல்லியில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

பகவத் கீதை வேண்டும்

பகவத் கீதை வேண்டும்

இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள சித்ரா ராமகிருஷ்ணன் படிக்க பகவத் கீதையை கேட்டதாக (பிசினஸ் டுடே ) கூறப்படுகின்றது. உலகின் மிக முக்கியமான எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றாக இருக்கும் என்.எஸ்.இ-யில், முக்கியமான தகவல்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்படும் தலைமை அதிகாரியான சித்ரா, முதல் கட்ட விசாரணையில் எதையும் கூறவில்லை. அவர்கள் என்.எஸ்,இ-யில் எடுத்த முக்கிய முடிவுகளை நினைவுகூற சிரமப்படுவதாகவும், மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

எனினும் கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா, உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டதாகவும கூறப்படுகிறது. அதன் பின்னரே சிபிஐ-யின் தலைமையகத்தில் உள்ள லாக்அப்பில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மெளனம் காத்து வரும் சித்ரா ராமகிருஷ்ணா இது குறித்த உண்மையை முழுமையாக கூறினால் மட்டுமே நடந்து என்ன என்பது தெரியவரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Chitra Ramakrishna request for Bhagavad gita after CBI arrest

Chitra Ramakrishnan request for Bhagavad gita after CBI arrest/பகவத் கீதையை கேட்ட சித்ரா ராமகிருஷ்ணன்.. சிபிஐ வளையத்தில் இருக்கும்போது..ஏன்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.