வென்டோ காருக்கு மாற்றாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்டுஸ் (Volkswagen Virtus) செடான் காரை இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 25 நாடுகளுக்கு மேலாக ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இன்று முதல் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு மே மாதம் மத்தியில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB A0 IN பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட Virtus செடான் ரக மாடல் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஸ்கோடா ஸ்லாவியா காரினை அடிப்படையாக கொண்டதாகும்.
ஸ்லாவியா மற்றும் டைகன் காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை விர்டுஸ் காரும் 1.0-லிட்டர் TSI மூன்று சிலிண்டர் என்ஜின் மற்றும் 1.5-லிட்டர் நான்கு-சிலிண்டர் TSI பெறுவதுடன் இரண்டும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மாடலாகும். 1.0 லிட்டர் என்ஜின் 113 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க்கை வழங்கும், இதில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, 1.5 லிட்டர் என்ஜின் அதிகபட்சமாக 148 bhp மற்றும் 250 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் அப்ஷனை பெற உள்ளது.
VW Virtus | 1.0-litre TSI 3-cylinder | 1.5-litre TSI 4-cylinder |
---|---|---|
Displacement | 999 cc | 1495 cc |
Max Power | 113 bhp | 148 bhp |
Max Torque | 175 Nm | 250 Nm |
Transmission | 6-Speed MT / 6-Speed AT | 6-Speed MT / 7-Speed DCT |
கேபினில் டைகன் எஸ்யூவி மாடலை போலவே உள்ள நிலையில் விர்டுஸ் டேஷ்போர்டையும், நேர்த்தியாக இணைக்கப்பட்ட 10-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பிராண்டின் புதிய மூன்று ஸ்போக் ஸ்டீயரிங் வீலையும் கொண்டுள்ளது. GT மாறுபாடு டாஷ்போர்டு, சிவப்பு தையல் மற்றும் அலுமினியம் பெடல்களில் சிவப்பு விவரங்களைப் பெறுகிறது.
ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் ஆகியவற்றைக் கொண்ட நடுத்தர அளவிலான செடான் பிரிவில் கடும் சவாலினை ஏற்படுத்தக்கூடும்.