புத்தம் புது காப்பி #MyVikatan

“சிந்தனைத் திறன்” (அ) “கற்பனைத்திறன்” என்று சொல்லப்படுகிற ஆறாம் அறிவின் தனித்தன்மை கொண்டே மனிதன் உலகத்தின் சக்தி வாய்ந்த உயிரினமாக மாறி ஆணவம் கொண்டான். ஆனால் இன்றோ ஒரு நுண்ணுயிரி அந்த ஆணவத்தை உடைத்திருக்கிறது அதே ஆறாம் அறிவின் துணைகொண்டு இதையும் கடந்து இன்னும் பல கடந்து மனித குலம் நிலைபெறப்போவதில் துளியும் ஐயமில்லை.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இத்தனை சக்தி வாய்ந்த ஆறாம் அறிவை மனிதனுக்கு தந்த இயற்கை அதற்குத் தீனி போடுவதற்கு வெறும் 2 வேலையாட்களை மட்டும் நியமித்திருப்பது தான் ஆம் நாம் அத்தனை சிந்தனைகளும் கற்பனையும் அறிவும் மனமும் நம் கண்ணால் காணும் ஒளியாலும் காதால் கேட்கும் ஒளியாலே தீர்மானிக்கப்படுகின்றன அந்த வகையில் நான் சொன்ன இரண்டு வேலையாட்கள் கண்ணும் காதுமே !

அப்படி என்றால் ஆறாம் அறிவின் பசி தேடலில் ஆரம்பிக்கிறது – “சினிமாவின் கதை !” “கதைகளின் கதை !”

“அப்பா ! அம்மா ! ஒரு கதை சொல்லேன் !” என்று கதை கேட்டுக் கொண்டே தூங்குகிற ஒவ்வொரு குழந்தையும், இயல்பாகவே மனிதன் ஒரு கதை விரும்பி என்பதை தன் மரபணுவால் பறைசாற்றுகிறது.

பாட்டி சொன்ன கதையை கேட்டு கற்பனை செய்துகொண்டே தெருக்கூத்துகளை நோக்கி நகர்ந்தோம், தெருக்கூத்துகள் தந்த மயக்கத்திலேயே நாடக அரங்கங்களுக்கள் நுழைந்தோம், நாடகங்களில் கை தட்டிக் கொண்டிருக்கும் போதே இலக்கியங்கள் படித்தோம், நாவல்களும் சிறுகதைகளும் கதைத்தோம்,

Cinema

இவையெல்லாம் தான் நாம் பார்த்த கேட்ட கதை வடிவங்களாக இருந்தது 1927 க்கு முன்பு வரை…

1927 இல் இருந்து சினிமா என்னும் மிகப்பெரிய கனவு தொழிற்சாலையின் கதவு திறக்கப்பட்டது. சினிமா பல கற்பனைக்கெட்டாத கதை சொல்லலை சாத்தியப்படுத்தியது. மந்திரம் சொல்லியது ! மாயாஜாலம் செய்தது, ! இரட்டை வேடம் போட்டது பின்பு அதை பத்தாக கூட ஆக்கியது நாளை அது 100 ஆக கூட ஆக்கும். இன்னும் எத்தனை ! எத்தனையோ ! மாயங்கள் செய்தது சினிமா.

ஆனால் இங்கு நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று இருக்கிறது. கதைகள் மாறலாம்! கதை சொல்லும் விதம் மாறலாம் ! அதன் வடிவம் மாறலாம் ! ஆனால் மனிதன் ஒரு கதை விரும்பி என்பது மட்டும் மாறவே மாறாது! அந்தக்கதை விரும்பியை சுவாரசியப்படுத்தாத எந்த ஒரு சினிமாவும் இங்கு வெற்றி பெறப்போவதில்லை. இது உலகறிந்த உண்மை.

சினிமா என்று சொல்லும்போது அது ஒரு காட்சி ஊடகம் அதில் கதையைவிட திரைக்கதை முக்கிய பங்காற்றுகிறது. கதையை தொடங்கும் காட்சியிலிருந்து அந்த கதையை முடிக்கும் காட்சி வரை ஒவ்வொரு காட்சியும், அதில் பங்கேற்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும், அந்த கதாபாத்திரங்கள் பேசும் ஒவ்வொரு வசனமும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது திரைக்கதையின் வடிவமே சற்று புதுமையானது தான். அப்படிப்பட்ட திரைக் கதையின் முக்கியத்துவத்தை அதன் எளிய வடிவத்தை உங்களுக்கு சமர்ப்பிப்பதே இந்த “புத்தம்புது காப்பி” தொடரின் நோக்கம்.

சமீபத்தில் நண்பர்களுடன் அமர்ந்து சில திரைப்படங்களை விமர்சனம் செய்து கொண்டிருந்த போது எனக்கு உள்ளே ஒரு கேள்வி “திரைக்கதை! திரைக்கதை! என்கிறாயே அப்படி ஒரு சுவாரசியமான திரைக்கதையை ஒரு அரதப் பழைய கதைக்கு உன்னால் எழுதிவிட முடியுமா ? அட அவ்வளவு ஏன்? பாட்டி வடை சுட்ட கதை க்கு உன்னால் ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை சொல்ல முடியுமா ?” இது என்னை பார்த்து நானே கேட்டுக்கொண்ட கேள்வி. இந்தத் தொடரில் அதையும் நான் சொல்லியிருக்கிறேன் அந்த கதைக்கு மட்டுமல்ல இன்னும் பல பழைய கதைகளுக்கு புதிய திரைக்கதை வடிவங்களை இந்தத் தொகுப்பில் நான் கொடுத்திருக்கிறேன். உங்களின் கதை வாசிப்பில் இது சற்று புதிய அனுபவமாக இருக்கும் உங்கள் கற்பனைத் திறனுக்கு இது ஒரு நல்ல தீனியாகவும் இருக்கும். எழுத்துவழி சினிமாவின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவதற்கு இது உதவியாகவும் இருக்கும்.

வாசித்து மகிழுங்கள். “திரைக்”கதை பேசுங்கள் !

(தொடர்வோம்!)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.