பெட்ரோல் டீசல் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் வரை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்தியஅரசைக் கேட்டுக் கொண்டுள்ளன.
5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள்அறிவிக்கப்பட்ட நிலையில் 125 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை. நேற்று உத்தரப்பிரதேசத்தின் கடைசி கட்டத் தேர்தலுடன் தேர்தல் நிறைவு பெற்றது.
இதையடுத்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த மத்திய அரசிடம் எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு139 டாலராக உயர்ந்துவிட்டது.
இந்நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 12 ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. இதனை ஓரளவுக்கு ஈடு செய்ய லிட்டருக்கு 5 முதல் 6 ரூபாய் வரை விலையை உயர்த்த மத்தியஅரசு அனுமதிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.