உக்ரைனில் தொடர்ந்து வரும் போர்ச்சூழலின் மத்தியில், தலைநகர் கீவ்வில் பிறந்துள்ள தனது குழந்தையை பார்ப்பதற்கு சிறிது நேரம் ஒதுக்கிய கீவ் நகர காவல் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
உக்ரைனில் ரஷ்யா 13வது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்த நாட்டின் சில முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
மேலும் தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவ துருப்புகள் சுற்றிவளைத்து தொடர்ந்து ஷெல் தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்திவருகிறது.
இந்த நிலையில் தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவம் எப்போது வேண்டும் என்றாலும் ஆக்கிரமிக்கலாம் என்ற பதட்டத்திற்கு நடுவில் கீவ் நகர காவல்துறை அதிகார ஒருவர், அங்குள்ள மகப்பேறு மருத்துவனையில் பிறந்துள்ள தனது ஆண் குழந்தையை பார்ப்பதற்கு சிறிது நேரத்தை ஒதுக்கியிருப்பது பாராட்டை பெற்றுவருகிறது.
அதேசமயம் அவரது மனைவி மற்றும் குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக அவருடன் அவரது நண்பர்களும் தங்களது துப்பாக்கிகள் மற்றும் கவச உடைகளுடன் வந்திருந்தது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
தாய்நாட்டை பாதுகாக்கும் முக்கிய பொறுப்பில் இருக்கும் காவல் வீரர்களின் இந்த கனிவான காதல் நிறைந்த செயல் பொதுமக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.