அண்மையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து
சர்வதேச மகளிர் தினம்
குறித்து
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, அதன்பின்னர் சிறிது கால ஓய்விற்கு பின்னர் ‘
முசாபிர்
‘ ஆல்பம் பாடல் தயாரிக்கும் தனது பணியில் மீண்டும் இறங்கினார் ஐஸ்வர்யா.
‘வலிமை’ படம் பார்க்க வந்த ஷாலினி அஜித்திடம் ரசிகர் கோரிக்கை: தீயாக பரவும் வீடியோ..!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஐஸ்வர்யா, தற்போது மீண்டும் காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை தற்போது தான் சிகிச்சையில் இருக்கும் மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுடன் கொண்டாடியுள்ளார் ஐஸ்வர்யா.
View this post on Instagram A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryaa_r_dhanush)
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா, தன்னுடைய மகன்களுக்கு பெண்களை மதிக்க கற்று கொடுப்பதாகவும், வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதிக்கு பெண்களே அடித்தளம் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பலரும் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மீண்டும் தியேட்டரில் COMEBACK கொடுப்பாரா சூர்யா?