புதுடெல்லி: மக்கள் மருந்தகங்கள் மூலம் குறைந்த விலையில் மருந்துகள் வாங்கி ஏழைகள்,நடுத்தர மக்கள் பலனடைகின்றனர் என்று பிரதமர் மோடி கூறினார்.
மக்கள் மருந்தக தினத்தை முன்னிட்டு மக்கள் மருந்தக திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். இந்த திட்டத்தால் பலனடைந்த மக்கள் பிரதமர் மோடிக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர். அப்போது பிரதமர் கூறியதாவது:
மக்கள் மருந்தகம் நாள் என்பது, ஒரு திட்டத்தை கொண்டாடுவதற்கான நாள் மட்டுமல்ல, இந்தத் திட்டத்தால் பயனடைந்த லட்சக்கணக்கான இந்தியர்களை இணைப்பதற்கான நாள். நாடு முழுவதும் 8,500க்கும் மேற் பட்ட மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகங்கள் திறக்கப்பட்ட பின் மக்களுக்கு ரூ. 13,500 கோடி மிச்சமாகி உள்ளது. ஏழைகள், நடுத்தர மக்கள் மருந்தகங்கள் மூலம் குறைந்த விலையில் மருந்துகள் வாங்கி பலனடைகின்றனர்.
புற்றுநோய், நீரிழிவு, இதயநோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கான 800க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலையை மத்திய அரசு முறைப்படுத்தி குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கச் செய்துள்ளது.
இதயத்தில் பொருத்தக் கூடிய ஸ்டன்ட் கருவி, மூட்டுமாற்று சிகிச்சைக்கான கருவிகள் விலைகளும் குறைக்கப்பட் டுள்ளன. மத்திய அரசின் நடவ டிக்கையால் மருந்துகளின் விலை பற்றிய மக்களின் பயம் குறைந்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
– பிடிஐ