மனைவியை விவாகரத்து செய்த இயக்குனர் பாலா..!காரணம் இதுதானா ?

1999 ஆம் ஆண்டு
விக்ரம்
நடிப்பில் வெளியான
சேது
படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்
பாலா
. அப்படம் அவருக்கு மட்டும் பெயரை வாங்கி கொடுக்காமல் ஒரு நடிகராக விக்ரமிற்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது.

தன் முதல் படத்திலேயே தனக்கான தனி பாணியை உருவாக்கினார் பாலா. அதன் பின் பிதாமகன்,
நான் கடவுள்
, பரதேசி, அவன் இவன் போன்ற வித்யசமான கதைக்களத்தில் படங்களை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

எதற்கும் துணிந்தவன் படம் வெளியாவதில் சிக்கல் ? அரசியல் கட்சியின் அறிக்கையால் பரபரப்பு..!

சூர்யா,
ஆர்யா
, விக்ரம் போன்ற நடிகர்கள் இவரின் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்தனர். இவரது படங்கள் இதுவரை 13 மாநில விருதுகளையும், 6 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது. இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வெற்றிகண்டார் பாலா.

தற்போது நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தனது மனைவியை விவாகரத்து செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இயக்குனர் பாலா கடந்த 2004 ஆம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

பாலா

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது. கடந்த நான்கு ஆண்டுகளாக கருத்து வேறுபாடிகளினால் பிரிந்திருந்த இவர்கள் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் முறைப்படி விவாகரத்தை பெற்றனர். இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சில ரசிகர்கள் பாலா எப்போதும் யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாக பேசக்கூடியவர். அதன்காரணமாக பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார். எனவே அந்த வெளிப்படையான பேச்சுதான் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்க கூடும் என் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் திரைபிரபலங்கள் பலர் விவகாரத்தை அறிவித்து வருவது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெய்வம் தல.. AK – வ பாத்தா போதும்…இது இதுதான் எங்களுக்கு தீபாவளி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.