புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்று குறைந்து வரும் நிலையில், மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் பரவிய கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த 2020 மார்ச் மாதம் சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து கொண்டே இருந்தது. எனினும் 2021 இறுதி முதல் சில சர்வதேச நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிச 15ல் தேதி முதலில் சர்வதேச விமானச் சேவையைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அப்போது உருமாறிய ஓமைக்ரான் பரவல் காரணமாக அனுமதி ரத்து செய்யப்பட்டது.
தற்போதைய சூழலில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி வரும் மார்ச் 27 முதல் சர்வதேச விமானச் சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்து சேவையைத் தொடங்கலாம் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதையடுத்து இரண்டாண்டுகளுக்கு பின் சர்வதேச விமான சேவை துவங்கப்பட உள்ளது.
Advertisement