லிவ்: உக்ரைன் மீது கடந்த 12 நாட்களாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் ராணுவம் மிகக் குறைந்த ராணுவ பலத்தைக் கொண்டிருந்தாலும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு தக்கபதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ஆர்வமுள்ளவர் கள் போரில் ஈடுபடலாம் என உக்ரைன் அதிபர் அறிவித்தார். இதையடுத்து, இளைஞர்களுக்கு குறுகிய கால துப்பாக்கிச் சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து உக்ரைனைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஆந்திரி சென்கிவ் கூறியதாவது:
நான் இதுவரை துப்பாக்கியைக் கையில் பிடித்தது கூட கிடையாது. ரஷ்ய ராணுவத்தை எதிர்க்க நான் உள்ளிட்ட 30 பேர் அண்மையில் குறுகிய கால துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் கலந்துகொண்டோம். லிவ் நகரின் மேற்குப் பகுதியில் நடைபெற்ற பயிற்சியில் விற் பனைப் பிரதிநிதிகள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், சமை யல் நிபுணர்கள், கால்பந்து வீரர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரஷ்ய வீரர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்க முடியுமா என்று கேட்டால் அதற்கு நான் தயாராக இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால் அதைச் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சியாளர் டென்னிஸ் கோஹுட் கூறும்போது, “இங்கு பயிற்சி பெறும் 10 வீரர்களாவது துப்பாக்கியை எடுத்து ரஷ்ய வீரர்களைச் சுட்டால் இந்த பயிற்சிக்கு பலன் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.