ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் அட்வென்ச்சர் ஹிமாலயன் ஸ்கிராம் 411 (Royal Enfield Scram 411)பைக்கினை விற்பனைக்கு வரும் மார்ச் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.
தோற்ற அமைப்பினை பொறுத்தவரை ஹிமாலயனில் இருந்து பல்வேறு மாறுபாடுகள் கொண்டு உள்ளது. குறிப்பாக முகப்பு ஹெட்லைட்டில் சிறிய மாற்றம் உட்பட மேலும் பெட்ரோல் டேங்க் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பேணல், இருக்கையில் சிறிய மாற்றம் மற்றும் பக்கவாட்டு பேனல் போன்றவைகள் இந்த மாடலுக்கு புதுப்பிக்கப்படடுள்ளது. மேலும் முன்புறம் வீல் 19 அங்குலமாக (21 இன்ச் ஹிமாலயன்) குறைக்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமான மற்றொரு மாற்றமாக ஸ்கிராம் 411 மாடலுக்கு கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மில்லி மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹிமாலயன் மாடலை பொருத்தவரை 220 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது. முன்புறத்தில் வின்ட் ஸ்கிரீன் பின்புறத்தில் லக்கேஜ் வைப்பதற்கான ரேக் நீக்கப்பட்டுள்ளது. முன்புற ஃபென்டர் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்கிராம் 411 பைக்கில் 6,500 rpm -யில் 24.3 ஹெச்பி பவர், 4,000-4,500 rpm -யில் அதிகபட்சமாக டார்க் 32 என்எம் வெளிப்படுத்தும் 411 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.
இந்த மாடலின் விலையானது தற்பொழுது விற்பனையில் உள்ள விட குறைவாக இருக்கும் என்பதால் புதிய ராயல் என்பீல்ட் ஸ்கிராம் 411 பைக்கின் விலை அனேகமாக ரூபாய் 2 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
image source – Team-BHP