ரூ.200ல் இருந்து ரூ.7 கோடிக்கான பயணம்.. அசத்தும் கோவை இளைஞர்.. !

எல்லோருக்கும் வணிகம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தொழில் செய்ய நினைப்போரில் 100 பேரில் 10 பேர் கூட அதனை செயல்படுத்துவதில்லை. அப்படி செயல்படுத்தினாலும் அதில் வெற்றி பெறுபவர்கள் ஒரு சிலரே.

அப்படி நடுத்தர குடும்பத்தில் பிறந்து சுமாராக படித்து அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்த ஒருவர், இன்று சிறந்த தொழிலதிபர்.

3 நாளில் 17000 கோடி மாயம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!

காய்கறி வணிகம் மூலம் எப்படி தான் கோடீஸ்வரன் ஆனார். எப்படி தனது வணிகத்தினை மேம்படுத்தினார். எப்படி பல தடைகளையும் தாண்டி இன்று வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறார் வாருங்கள் பார்க்கலாம்.

 எல்லோருக்கும் உள்ள ஆசை

எல்லோருக்கும் உள்ள ஆசை

எல்லோருக்கும் மனதில் இருக்கும் ஒரு ஆசை நம்மை யாரெல்லாம் இழிவுபடுத்தினார்களோ? அவர்கள் முன்பு நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பது தான். அப்படி நினைத்து இன்று வாழ்ந்து காட்டி கொண்டிருப்பவர் தான் கோவையை சேர்ந்த ஷியாம் பிரசாத் ராஜசேகரன். சராசரியான சாதாரண குடும்பத்தில் வளர்ந்த ஷியாம், சுமாராக படிப்பவர்.

 இது தனக்கான துறையல்ல

இது தனக்கான துறையல்ல

தான் 10ம் வகுப்பில் கூட கணிதத்தில் வெறும் 35 மதிப்பெண் பெற்று பார்டரில் பாஸானதாக கூறுகின்றார். அதன் பிறகு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படிக்க தொடங்கியிருந்தாலும், வரவே வராது என்ற கணக்கு தான அதிகம் போட வேண்டியிருந்ததாகவும், அப்போது இது நமக்கான துறை இது இல்லை என புரிந்து கொண்டதாகவும் கூறுகிறார்.

 நிதி ரீதியாக சப்போர்ட் இல்லை
 

நிதி ரீதியாக சப்போர்ட் இல்லை

அம்மாவின் ஆதரவு என்பது மிகப்பெரியதாக இருந்தாலும், நிதி ரீதியாக சப்போர்ட் செய்யும் அளவுக்கு யாரும் இல்லை. எனினும் மனதில் உறுதியுடன் நண்பரின் உதவியுடன்,பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்கும் சேவையை செய்து வந்துள்ளார். இவரின் முழு நேர பணியே இதுவாகத் தான் இருந்துள்ளது. அங்கு கிடைத்த சந்தோஷமும், உத்வேகமும் தான் தன்னை அடுத்த இடத்திற்கு செல்ல வழிவகுத்ததாகவும் கூறுகிறார்.

 முதல் நிறுவனம்

முதல் நிறுவனம்

தனக்கு கிடைக்காத கல்வியையே முதல் வணிகமாக ஆரம்பித்த ஷியாம், பற்பல கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆரம்பத்தில் ஒரு வணிகத்தினை தொடங்கி நன்றாக வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் பலர் இதனை இவரிடம் இருந்து கையகப்படுத்தி விட்டதாகவும், 2020ல் இருந்து வெளியே வந்துவிட்டார்.

 இரண்டாவது வணிகம்

இரண்டாவது வணிகம்

தனக்கு எது வருமோ அதனை செய்யுங்கள் என கூறும் ஷியாம், அடுத்ததாக வெஜ் ரூட் என்ற நிறுவனத்தினை தொடங்கியுள்ளது. இது விவசாயிகளையும், நுகர்வோரையும் இணைக்கும் ஒரு நிறுவனமாகும். இதன் மூலம் காய்கறி விற்பனை செய்யும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். ஆனால் நவீன முறையில் டெலிவரி செய்யும் ஒரு நிறுவனம்.

 பல ஆயிரம் வாடிக்கையாளர்கள்

பல ஆயிரம் வாடிக்கையாளர்கள்

இதன் மூலம் பிரெஷ் காய்கறிகள் எளிமையாக மக்களை சென்றடைய முடியும். விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அப்படி ஒரு வணிகத்தினை செய்து வரும் வெஜ் ரூட், தற்போது 6 நகரங்களில் வணிகம் செய்து வருகின்றது. இவர்களுக்கு தற்போது 70,000 வாடிக்கையாளர்களுக்கும் மேல் உள்ளனர்.

 எது வெற்றி

எது வெற்றி

வெற்றி என்பது மிகப்பெரிய வீடு, கார் என்பது இல்லை, 4 பேர் நம்மால் சந்தோஷமாக இருந்தால் அது தான் வெற்றி என்கிறார் ஷியாம். எவ்வளவு சீக்கிரம் ஒரு வணிகத்தினை ஆரம்பிக்கிறீர்களோ? அவ்வளவு தோல்விகளும் வரும். ஆனால் அது தான் வெற்றிக்கு அடிக்கலாக மாறும். ஆக நீங்கள் ஒரு விஷயத்தினை பற்றி நினைத்து நினைத்து பார்ப்பதை விட, அதனை செயல்படுத்துங்கள்.

 விரைவில் ஆரம்பியுங்கள்

விரைவில் ஆரம்பியுங்கள்

ஆக எவ்வளவு விரைவில் தொழிலை ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பியுங்கள். அப்படி ஆரம்பித்தால் பல தோல்விகள் வரும். அதனையே பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். அது தான் உங்கள் தொழிலை வெற்றிகரமாக அமையும் என்கிறார்.

கவனம்

கவனம்

ஆரம்பத்தில் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் கவனம் செலுத்தி வரும் வெஜ் ரூட் நிறுவனம், தற்போது மதுரை, தூத்துக்குடி, திருப்பூர், ஹைத்ராபாத், நியூ டெல்லி, மும்பை, சென்னை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் செயல்பாடுகளை செய்து வருகின்றது.

 முதலீடு

முதலீடு

வெற்றிகரமான நடைபோட்டுக் கொண்டு இருக்கும் இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் 1,25,000 டாலர்கள் முதலீட்டினையும் வணிக விரிவாக்கத்திற்காக திரட்டியது. ஆரம்பத்தில் சில நூறு ரூபாயில் ஆரம்பித்த நிலையில், இன்று 7 கோடி ரூபாய்க்கு மேலாக டர்ன் ஓவர் செய்யும் ஒரு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Travel from Rs 200 to Rs 7 crore , Coimbatore youth who is dusting off the powder in Agritech business

Travel from Rs 200 to Rs 7 crore , Coimbatore youth who is dusting off the powder in Agritech business/ரூ.200ல் இருந்து ரூ.7 கோடிக்கான பயணம்.. அசத்தும் கோவை இளைஞர்.. !

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.