ரூ.6 லட்சம் கோடி அவுட்.. முதல் நாளே கஷ்ட காலம்.. ஏன்.. என்ன ஆச்சு..?

முதலீட்டாளர்கள் வாரத் தொடக்கத்தின் முதல் நாளான இன்றே, சந்தையில் ஏற்பட்டுள்ள பலத்த சரிவின் காரணமாக பெரும் இழப்பினைக் கண்டுள்ளனர்.

இன்று காலை தொடக்கத்திலேயே 6 லட்சம் கோடி இழப்பினை கண்டுள்ளனர். இது ரஷ்யா – உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் பெரும் தொடர்ந்து பங்கு சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

இதற்கிடையில் தொடர்ந்து பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 6.28 லட்சம் கோடி இழப்பினை கண்டுள்ளது.

நீதிபதி நருக் கேள்வியால் சித்ரா ராமகிருஷ்ணா உடனடி கைது.. சிபிஐ அதிரடி..!

சந்தை மதிப்பு இழப்பு

சந்தை மதிப்பு இழப்பு

குறிப்பாக கடந்த அமர்வில் 246.85 லட்சம் கோடி ரூபாயாக சந்தை மூலதனத்தினை கொண்டிருந்த நிறுவனங்கள், இன்று காலை நிலவரப்படி 240.57 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டிருந்தது.

இன்று காலை நேரப்படி சென்செக்ஸ் 1409 புள்ளிகள் குறைந்து, 52,924 புள்ளிகளாகவும், நிஃப்டி 378 புள்ளிகள் அல்லது 15,866 புள்ளிகளாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

30ல் 29 நிறுவனங்கள் வீழ்ச்சி

30ல் 29 நிறுவனங்கள் வீழ்ச்சி

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 நிறுவனங்களில் 29 நிறுவனங்கள் சரிவில் தான் காணப்பட்டது. எனினும் டாடா ஸ்டீல் நிறுவனம் மட்டும் இதில் கெயினராக இருந்தது. மற்ற அனைத்து நிறுவனங்களும் சிவப்பு நிறத்திலேயே காணப்பட்டன. தொடர்ந்து 4வது நாளாக நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் சந்தையானது, சரிவிலேயே காணப்படுகின்றது.

உச்சத்தில் கச்சா எண்ணெய்
 

உச்சத்தில் கச்சா எண்ணெய்

தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் கச்சா எண்ணெய் விலையானது 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரலுக்கு 130 டாலர்கள் என்ற லெவலை எட்டியுள்ளது. கொரோனாவின் பிடியில் சிக்கியிருந்த பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கிய நிலையில், தற்போது உக்ரைன் ரஷ்யா பிரச்சனையால் மீண்டும் சரியலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரம் என்ன?

தற்போதைய நிலவரம் என்ன?

தற்போது 12.50 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 1161.74 புள்ளிகள் குறைந்து, 53,172 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 307.8 புள்ளிகள் குறைந்து, 15,937.55 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. முன்னதாக சென்செக்ஸ் 1700 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்ட நிலையில், இன்றும் மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது.

மோசமான சூழல்

மோசமான சூழல்

தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், அதிகரித்து வரும் போர் பதற்றம், பணவீக்கம், மெதுவான வளர்ச்சி வேகம் உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் சந்தையானது சரிவினைக் கண்டு வருகின்றது. இந்த மோசமான போக்கே இன்னும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rs.6 lakh crore investor wealth wiped out in early session today amid crashed market

Rs.6 lakh crore investor wealth wiped out in early session today amid crashed market/ரூ.6 லட்சம் கோடி அவுட்.. முதல் நாளே கஷ்ட காலம்.. ஏன்.. என்ன ஆச்சு..?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.